Saturday, June 2, 2012

மனம் கொத்தி பறவை - Olympia Movies


கிச்சு கிச்சு மூட்டும் இறகுகள்..


டிஜிட்டல் படங்களின் நான்-ஸ்டாப் வருகைக்கு பின்னர் பலமுறை பலமாக பத்து இன்ச் ரிவிட்டுகளை பின்னால் வாங்கிய அனுபவங்களால்,  பறவை எதுவானாலும் இரை நாம் ஆகி விடக்கூடாது என்கிற மேலான சிந்தனையின் வெளிப்பாடாக,  சமீப காலமாக (சுமார் ஒன்றரை வாரமாக..)   மொக்கை ஃபிலிம் க்ளப்பு (@athisha @narain @kingvishwa @lucky @louiscrandel... ) நண்பர்களிடம்கூட கூட்டு, பொரியல் என எதுவும் வெக்காம சுற்றிக்கொண்டிருந்தேன். இந்நிலையில் நேற்று திடீரென ஞானம் பெற்று, ”இப்படி கடமை உணர்ச்சி செத்துபோயி.. தியேட்டருக்கு போகாமலிருந்தா என்னவாகும்..”  தங்க தமிழ் திரை உலகை யார்தான் காப்பாற்றுவது?”  என என் விரதத்தை கைவிட்டு தஞ்சமடைந்த இடம்.. கோவை காவேரி திரை அரங்கம்..  
                                                (ஏ.சி போட்டாமட்டும் போதாது..  மூட்டை பூச்சி மருந்தும் போடுங்கப்பா.    நைட்டு ஷோ டைம் 10:10pm லிருந்து 9.40க்கு மாத்திட்டாங்களாம்.. )

  நமக்கு மட்டும் லேட் ஷொ ஆகிடுச்சே.. என்று அவசரமாக டிக்கட் வாங்கி..   வைகுண்டத்துக்கே டிக்கட்டு வாங்கும் வேகத்தில் மூன்றவது மாடிக்கு படியேறி மூச்சு முட்டும் வேகத்துல உள்ளே வலதுக்காலை வெச்சு நுழைந்தேன்..

         நான் நுழைவதற்குள் ரசிகர்கள் கதைக்குள் நுழைந்து இருப்பார்கள் போல..  கொத்து கொத்தாய் கோரஸாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். 

கதை ................................................................?                

       அப்படியெல்லாம் ஒன்றும் புதிதாக தென்படவில்லை.. காதலும் காதலைச்சார்ந்த மரியாதைகளின் கலவையான சமாச்சாரம்தான் படத்தின் கதைக்களம் .  
           கட்டிட காண்டிராக்டர் இளவரசுவின் மகன் கார்த்திகேயன்
எதிர்வீட்டில் உள்ள வசதி படைத்த முரட்டு அப்பாவையும் ,கடா மீசை சித்தப்பாக்களையும் கொண்ட, தாயை சிறுவயதில் இழந்த ரேவதியை காதலிக்கத்துவங்குகிறார்.  பன்னெடுங்காலமாக தமிழ் படங்களில் வருவது போல திடீரென்று ரேவதிக்கும் இன்னொரு முரட்டுபயலுக்கு நிச்சயம் செய்கிறார்கள்.. 
          இப்போதுதான் சிவ கார்த்...(பேர சுருக்கச்சொல்லனும்..) ..திகேயனுக்கு காதல் பொத்துக்கொண்டுவர கோவில் மொட்டைமாடியில் தன் ஒருதலைக்காதலை காதலி ரேவதியிடம் (புதுமுகம்.. ஆத்மியா..?  ) சொல்லி,  ஒரு எதிலும் சேராத மந்தமான ரியாக்‌ஷனை பதிலாக வாங்குகிறார். 
  
         அப்புறம் திடீரென வரும் பாம்பே பாய்ஸ் (நந்து, சாம்ஸ்) சிவகார்த்தியின் உள்ளூர் நண்பர் சூரி அண்ட் கோவின் தகவல் உபயத்தால் ஒரு புது உபாயத்துடன்(?) மப்படித்து மட்டையாகிப்போன கார்த்திகெயனையும்.. ஆத்மியாவையும் கடத்திச்செல்ல அப்புறம் நடப்பதெல்லாம்...  உங்களுக்கே புரிந்திருக்கும். 


படம் எப்படி?

        உங்களின் அதிமேதாவித்தனத்தை அஞ்சு ரூவா கோணிப்பையில் வைத்து அக்குளுக்குள் சுருட்டிக்கொண்டு தியேட்டருக்குள் போனால்..  தாராளமாய் போய் ஏராளமாய் சிரித்துவிட்டு வரலாம்.

           இடை இடையே ’கொல பண்ண ஆள் ஈசியா கெடச்சுடறானுக கொத்தனார் வேலைக்குத்தான் நாயா அலைய வேண்டிகெடக்கு’  போன்ற அர்த்தபுஷ்டியான!!!  வ்சனங்களும் தென்படலாம்.

           சிங்கம்புலி, சூரி கூட்டணியினரின் காமெடி முன்பாதி நகர்வுக்கு பயன்படுவது போல..  பின் பாதி காதல்காட்சிகள் கவனம் ஈர்ப்பது இல்லை. இதற்கு ஆத்மியாவின் ஆன்மா இல்லாத ரியாக்‌ஷன்கள் காரணமா? என சி.பி.ஐ வைத்துதான் விசாரிக்க வேண்டும் 
                                    (புண்ணாக்கு ஊழலுக்கெல்லாம் சி.பிஐ வைக்கும்போது.. இதுக்கெல்லாம் வெச்சா குடியா முழுகிடும்??) 
      
       மொத்தத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாது தியேட்டருக்குள் போனால்.. ’கொஸாக்ஸி பசப்புகல்’ பார்த்த பரவசம் கிடைக்கும்.. 

       காமெடிக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்..    கதைக்கு இன்னும் வினைக்கெட்டு இருக்கலாம். (’வினைக்கெட்டு’ Courtesy by: புதிய தலைமுறை TV)

நடிப்பு:
       
        சிவகார்த்திகேயனை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம்.. அல்லது அவரது அவுட்புட்டே அவ்வளவுதானா..??  
       
         ’மறுபடியும் ஹீரோவா நடிக்கனும்னா அவர் தன் முகத்தில் பஞ்ச ஸ்தானத்தில் அலகு குத்தி, குத்தின அலகுகள் தெரிச்சுப் போகுமளவுக்கு தேர் இழுத்தால் மட்டுமே முக உணர்ச்சிகளில் கொஞ்சமேனும் முதிர்ச்சி தெரிய வரும்’ னு காசிமேடு வெட்னரி டாக்டர் அட்வைசியிருக்கார். 

         ஆத்மியா..  ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..  ரெண்டு பாட்டு ஒரு அய்ட்டம் ஸாங்குன்னு நெனச்சிட்டு வந்த அம்மினிய நடிக்கச்சொல்லி நச்சரிச்சிருப்பாங்க போலிருக்கு.. 

         இமானின் பாடல்கள் பருவாயில்லை.. பிண்ணனி இசை அவ்வப்போது முன்னணியில் வந்து இம்சிக்கிறது. மற்றபடி நேர்த்தி(கடன்).

  அப்புறம்....     எல்லாம் சுபம்! 


ட்ரெயிலர இங்க கொத்துங்க.. 
http://www.cinemaindya.com/south-movies/manam-kothi-paravai