Wednesday, September 15, 2010
சீக்ரெட்'ஆ சிகரெட்
சீக்ரெட்'ஆ சிகரெட் பிடிக்கும் சின்ன பசங்க...
நாளைய பாரதம்.. ம்ம்ம்ம்.....
(கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில்..)
Wednesday, August 25, 2010
நான் புடிச்ச மான்..
இது பக் வகையைச்சேர்ந்த மான்,
இதைப்பார்ப்பது அரிது...
இதை தனியாகப்பார்ப்பது அதனினும் அரிது...
இணையாகப்பார்ப்பது இன்னும் அரிது...
- மழை பெய்து ஓய்ந்த ஒரு நொடியில்
கிடைத்த கிளிக்...
Tuesday, August 24, 2010
Sunday, August 15, 2010
குடைக்குள் தேவதை,,
ஒரு மழை நாளில்
களங்கமில்லா அன்பையே
பரவசம் என்றுணர்த்துவதற்கு
என் பள்ளிக்கும் ஒரு குட்டி தேவதை
பிரவேசித்தது - உங்களுக்கு நேர்ந்ததைப்போலே....
ஒவ்வொரு விடுமுறை நாளிலும் மறந்திடுவேன் அவளை....
அடுத்த பள்ளி நாட்களில்
மறுமுறை அவளை பார்த்திடும்போது
மீண்டும் அந்த பரவசம்...
இதில் இடைவெளி ஏனென்று யோசித்து
நிரப்பிட நினைத்திடாத
என் குழந்தை கணங்கள் இனித்தது எனக்கும் - உங்களைப்போலவே....
ஆனால் பின்னொரு பிரிவின் பின்னர்
அந்த தேவதை வரவே இல்லை...
தந்தைக்கு பணிமாற்றமென்று...
பின்னாளில் யாரோ சொன்னார்கள்.
மீண்டும் அந்த தேவதைப்பரவசம்
கிடைக்கும் என்று
என் காத்திருத்தல் தொடர்கிறது
இன்று வரையில் - உங்களைப்போலவே.
களங்கமில்லா அன்பையே
பரவசம் என்றுணர்த்துவதற்கு
என் பள்ளிக்கும் ஒரு குட்டி தேவதை
பிரவேசித்தது - உங்களுக்கு நேர்ந்ததைப்போலே....
ஒவ்வொரு விடுமுறை நாளிலும் மறந்திடுவேன் அவளை....
அடுத்த பள்ளி நாட்களில்
மறுமுறை அவளை பார்த்திடும்போது
மீண்டும் அந்த பரவசம்...
இதில் இடைவெளி ஏனென்று யோசித்து
நிரப்பிட நினைத்திடாத
என் குழந்தை கணங்கள் இனித்தது எனக்கும் - உங்களைப்போலவே....
ஆனால் பின்னொரு பிரிவின் பின்னர்
அந்த தேவதை வரவே இல்லை...
தந்தைக்கு பணிமாற்றமென்று...
பின்னாளில் யாரோ சொன்னார்கள்.
மீண்டும் அந்த தேவதைப்பரவசம்
கிடைக்கும் என்று
என் காத்திருத்தல் தொடர்கிறது
இன்று வரையில் - உங்களைப்போலவே.
எகத்தாளம்
எலும்புக்கூட்டின் முந்தைய STAGE-ல்
எத்தியோப்பிய சிறுமி...
“I DON'T CARE” என்றாள்
எகத்தாளமாய்...
யாரோ
“அதிகமா சாப்பிட்டா
குண்டாயிடுவே!”
என்று சொன்னார்களாம்!
Subscribe to:
Posts (Atom)