Wednesday, December 26, 2012

BAY-WATCH : பெரியகுளம் ட்விட்அப்


 CAST By:  (கூடி கும்மியடிச்சவங்க!!!)
@prasanna2903 @Er_Thameem @vattajileppi  @jeevanlancer @SureshB_ @navinmmr @vtviji @joseph_selva @SabaSSR @0SGR  & @pizhaithiruthi

  பெரியகுளம் ட்விட்டப்..                             நாள் : 23-12-2002

   ”காட்டுபங்களா” என்று திட்டமிடப்பட்டிருந்த ட்விட்டப் கொஞ்சம் லொக்கேஷன் மாறியது. ஆனால் அதுதான் ட்விட்டப்பின் ஹைலைட்.  

   அட்டகாசமான லொக்கேஷன். மாபெரும் மாங்கா தோப்புகளை கடந்து போனா..,  (சேலத்துக்கு அடுத்து அதிகம் மாம்பழம் விளையும் பகுதியாம்..அதைச் சார்ந்து  லாரி தொழிலும் அமோகம்.  (செனரல் நாலேட்ஜுக்கு..  ஹிஹி.. ;-)) ) 

  கொடைகானலில் இருந்து வரும் மலை ஆறு.. அதுல அங்கங்கே சின்ன தேக்கம்.. கேக்கவா வேணும் நம்ம ட்விப்ஸுக்கு?. 

  தண்ணின்னா சாதா தண்ணியில்ல..  செம க்ளியரு..  நம்மாளுங்க அத்தனை பேரும் சாயங்காலம் வரை பண்ண அளப்பறைக்கு அப்புறமும் அந்த தண்ணி  அப்படியே சுத்தமா இருந்ததுதான் விஷேசம்.   


     சும்மா சொல்லக்கூடாது.. என்னைய நான் ஸ்டாப்பா ஃபாலோ பண்ணி பெரியகுளத்துல மூண்ராந்தல் லொக்கேஷனுக்கு வரச்சொன்ன மாப்பி ப்ரஸன்னாவ மன்சுக்குள்ளே பாராட்டிட்டு போயி இறங்குனேன்.  அவர்தான் வண்டி வெய்ட்டிங்குன்னு சொன்னாரே!!!  பாத்தா.. அங்கன அலர்ட்டா நின்னிருந்தது  இந்த வண்டிதான்...   
   
        ’ஆஹா.. நாமளாதான் போய் வலைல விழுந்துருக்கமா?’ன்னு ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.  நல்ல வேளை  மாப்பிளை தமீம் ரோட்டுல எட்டு போட்டுட்டே பைக்குல வந்து சேந்தாரு.. காரணம் கேக்காம ஏறுனா கரணம் தப்பிடுமோன்னு அலர்ட்டா “ஒய்.. யூ அலசிங் பைக்குன்னு?”  கேள்விய கேட்டு வெச்சேன். அவரும், பைக் எடுத்து ரொம்ப நாள் ஆச்சு.  ஃபுல்லா காரே யூஸ் பண்றதால கொஞ்சம் அன் ஈஸியா இருக்குன்னத நம்பித்தானே ஆகணும். 

  
        ட்விட்டப் ஆர்கனைஸர் தி கிரேட் @Er_Thameem ஒவ்வொருத்தரையும் ஃபாலோ பண்ணி, பிக்கப் பண்ணி ஸ்ஸ் யப்பா.. என்னா பொறுப்பு தெரியுமா?. ஹேட்ஸ் ஆஃப் மச்சி..  
ஒரு டாடா சுமோ, ஒரு இண்டிகா காரு.. கூடவே மூன்று உள்ளுர் நண்பர்கள்னு ஒரே அமர்களம்தான். 

         முதல் நாளே பெரியகுளத்தில ஆஜரான ஒரு கேங்கு.. லாட்ஜுல தங்குனது மட்டுமில்லாம.. ராத்திரியே விட்ட சவுண்டுல லாட்ஜின் ஒரு பக்கம் பலமான சேதாரம். நஷ்ட்ஈடா என்ன கொடுத்தாருன்னு இஞ்சி-தமீம்’ஐ கேட்டாதான் தெரியும்.

   இதுல எல்லார் ஜீவனை(?)யும்  வாதிச்ச அந்த மதுர ட்விட்டரு சும்மா இருக்காம லாட்ஜு மேனேஜர் பெருசுக்கே டிப்ஸ் கொடுக்குறேன்  சொன்னதுல அவரு இந்த உச்சக்கட்ட அவமானத்த தாங்கமுடியாம சொந்த ஊருக்கே போனது தனிக்கதை. 


        ஏற்கனவே ஏழெட்டு ட்வீப்ஸு ஸ்பாட்டுக்கு போயாச்சுன்னு உப தகவலை கேள்விப்பட்ட் உடனே நான் அந்த ஸ்பாட்ட நெனச்சி கதிகலங்குனது நெசம்தான். அப்புறம்தான் தெரிஞ்சது இன்னொரு கொசுறு தகவல்.. ’சரக்கு இன்னும் போய் சேரலை’ன்னு. 

        சூப்பரான மாங்கா தோப்புகளை கடந்து ரோட்டோரம் வண்டிய போட்டு கொஞ்சமே நடந்தா ஸ்பாட்டு.. அங்க ஏற்கனவே காத்திட்டு இருந்த நம்ம ட்வீப்ஸுங்க மூஞ்ச பாக்கணுமே!!. 

 இதோ உங்க பார்வைக்கே..


















     நானும் என் பங்குக்கு ஸ்வீட்ஸு வாங்கிட்டு போனா.. எதுக்கு எத வாங்கிட்டு வந்திருக்கான் பாருன்னு? மனசுக்குள்ள் திட்டியிருப்பாங்க போலிருக்கு. என்னைய கேவலமா ஒரு லுக்கு விட்டுட்டு.. வெச்சு தொலை.. தின்னு தொலைக்கிறோம் ரேஞ்சுக்கு டீல் பண்ணாங்களே பாக்கணும்! . 


        ஏற்கனவே மொதோ நாளே மாட்டுன @navinmmr ஐ காலைவரைக்கும் ஓட்டு ஓட்டுனு ஓட்டி ஓஞ்சுப்போயிருந்த மக்களுக்கு..  தொண்டை ரிப்பேராயி பேசவே முடியாம இருந்த ஒரு அற்ப பிராணியா நான் போயி  
 கெடச்சேன் பாக்கணுமே.. அடுத்த மூணு மணி நேரம்.. @0SGR  வரும்வரைக்கும் என்னை தாளிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாயங்க. அதுக்கு பழிவாங்கல்தான் இந்த பதிவுன்னு உங்களுக்கு இந்நேரம் புரிஞ்சிருக்குமே??..  அதேத்தான்..  

      என்னைய வச்சு அவங்க வாங்குன ஆர்டிக்கு கொஞ்சமும் குறையாம இந்த பதிவுக்கு  RT விழுந்துச்சுன்னா போதும் என் ட்விட்டர் வாழ் சக மக்களே...  அத நெனச்சிட்டே ட்விட்டர் கரைய கடந்து என் ட்விட்வாழ் கடனை கழிச்சுடுவேன்.            

     
   இதுவரைக்கும் வந்து சேராத @0SGR ஐ பிக்கப்பண்ணிட்டு வரும்போதே மெயின் டிஷ்ஷு..  சைட் டிஷ்ஷோட வர்றதா தமீம் சொல்லிட்டு போயிட்டார். தண்ணில இருக்குற மீன் எதுவும் புடிக்க திராணியில்லாத நம்ம ட்விட்டர் கேங்கு என்னை  வறுக்க ஆரம்பிச்சது..  எத்தனை நக்கல்.. எத்தனை RT? எத்தனை RTக்கு RT?,  எத்தனை MT???.. ஹ்ஹ்ம்ம்..  அவிங்களால எவ்ளோ முடியுமோ.. அவ்ளோ ஓட்டுனாய்ங்க.. அது கூட பரவால்ல.. கடைசில அதுல இருந்த @vattajilepi மாப்பி என்னைய பாத்து ஒரு வார்த்த சொன்னான்.. ”நீங்க எவ்ளோ ஓட்டுனாலும் தாங்குறீங்க மாம்ஸு.. நீங்க ரொம்ம்ம்ம்ப  நல்லவரு!!”ன்னு. வடிவேலு ரேஞ்சுக்கு டீல் பண்ண இவிய்ங்கள பழிவாங்கும் நெலமைல நம்ம தொண்டை இல்லைன்னு முடிவு பண்ணி அமைதியாயிட்டேன்.. 

    ஒருவழியா.. @0SGR ஐயும் இழுத்துட்டு வந்து சேந்தாங்கப்பா. தமீமும் இன்னும் உள்ளூர் நண்பர்கள் ரெண்டுபேரும் வந்து சேரவும் ட்விட்டப் களைகட்ட ஆரம்பிச்சுடுச்சு.. 
    
      இதுல நம்ம ஜோசப்பு அளப்பறை தனி ஆவர்த்தனம்தான்.. எல்லாரும் மெயின் அயிட்டத்துல கிளாஸ(கை)வைக்கும்போது இவருமட்டும் ஊறுகா இருந்தா போதும் ஒதுங்குனது மட்டும் இல்லாம ஒரு போஸ் கொடுத்து என்னை போட்டோ எடுக்கச்சொல்லி வெறுப்பேத்தி கொடுத்த லுக்கு இங்கே.. 

    டி.எல்ல ஏற்கனவே பிரபலமான நம்ம அகோரி பிரஸன்னாவின் ஃபோட்டோவை மறு ஒளிபரப்புல உங்களுக்கு ஆட்சேபனை இருக்காதுன்னு நம்புறேன்..   


அதுக்கு அப்புறம் நடந்ததெல்லாம்.. அலப்பறை அட்ராசிட்டிகள்தான்.  

நம்ம @vtviji நான் பாறைலதான் ஸ்கேட்டிங் அடிப்பேன்னு அடம்பிடிச்சதுல.. நம்ம @ஓஎஸ்ஜிஆருக்குதான் ரெண்டு ஃப்ராக்ச்சர்.. பின்னே விஜிய காப்பாத்த களம் இறங்குனது அவருதானே.. 

எல்லோரும் ஹாப்பி.. இது வரைக்கும் இந்த மாதிரி ட்விட்டப் நடந்திருக்கமான்னு தெரியல.. ஆனா இத மிஸ் பண்ணினவங்களுக்கு நிச்சயமா இது போல மறுபடியும் கிடைக்காது.  இதுக்காக தமீமுக்கு நன்றி சொன்னா அவரு கடுப்பாயிடுவாரு. 

      அவர் நண்பர்கள் அதுக்கு மேலே போயி சரியான கம்பெனி..  பலவருஷம் பழகுன நட்புணர்ச்சி..  ஒருத்தர் ”நான் ஜீவனுக்கு நண்டு புடிச்சு தந்துட்டுதான் மறுவேலை பாப்பேன்னு கெளம்பி போனவரு.. என்ன ரேஞ்சுல தீவிரமா இறங்கியிருப்பார்னு ஃபோட்டோவ பாருங்க தெரியும்.. 
   
       செம ஜாலி ட்விட்டப்ல மக்கள் கட்டவிழ்த்த காட்டுவாசிங்க போல சுத்திட்டு இருந்தாலும்.. அநாவசியமா சம்பந்தமில்லா மத்த ட்விட்டர்களை பத்தி ஸீரியஸா எதுவும் பேசாம இருந்து நாகரீகத்த நிரூபிச்சுட்டாங்கய்யா.. குட் ட்ரோல்ஸ்.. 

     கூடி கும்மியடிக்கலன்னா ட்விட்டப் முழுமையடையாதுன்னு முடிவு பண்ணி தண்ணில தண்ணிக்குள்ள வட்டம் கட்டி (கட்டம் கட்டி இல்லை..) அடிக்க தொடங்குன ரவுசு.. ஒரு மணி நேரமாயும் நின்னபாடில்ல. 



      சாயங்காலம் அஞ்சு மணிக்கும் ட்விட்டப் ஐ முடிக்க மனசில்லாம கெளம்புன மக்களுக்கு.. அங்கேயே ஒரு குடிசை போட்டுக் கொடுத்திருந்தா போதும் அப்படியே செட்ட்லாகியிருப்பாங்க போல.. 




அடுத்து என்ன.. ஃபோட்டொவுக்கு போஸ் கொடுத்துட்டு கெளம்பிட்டோம்.. எல்லோரையும் மதுரைவரைக்கும் சுமோவுல ட்ராப் பண்ண தமீம்.. யூ டன் அ க்ரேட் ஜாப் மேன்..!!!  


  ஜோசப் செல்வா கடித்து குதறப்பட்ட வழக்குல இவுங்களுக்கும் தொடர்பு இருக்கு.. 

மொத்த கேங்கும் இந்த ஃபோட்டொவில.. 


     

இவிய்ங்ககிட்ட இருந்து தப்பிச்சு வந்து உசுரோட இருக்கும் என் மனோதிடத்த நீங்க பாராட்டுவீங்கன்ற நம்பிக்கையுடன்.. ஆனந்த கண்ணீருடன் விடைபெறுகிறேன்.. 

நட்புடன்.. 

உங்கள் @pizhaithiruthi




Friday, August 24, 2012

பதினெட்டு வயசு – ரிப்பேரான மனசு!



திரைவிமர்சனம்:

  [ Cast: Johnny, Gayathri   Director: Paneerselvam  Producer: S S Chakravarthy   Music: Charles   Bosco, Dinesh Kanagaratnam   / Cinematography: Shakthi / Editing: Anthony Gonsalves  / Art Direction: Sanjay Karan / Screenplay: Paneerselvam  / Action Direction: Rajasekhar ]

ரேணிகுண்டா இயக்குனரின் அடுத்த படைப்பு என்ற அடையாள முத்திரையை சுமந்து வரும்போதே லேசான சந்தேகம். ”சந்தன மரத்துக்கு எதுக்கு சைன் போர்டு விளம்பரம்?” அது நிஜமாகவே சந்தனமரம் எனும்போது!. நல்ல படமாக இருப்பின் முந்தய எல்கேஜி ஐடி கார்டை யூகேஜியிலும் சுமக்க வேண்டாமே?!. 

இது கெட்ட அம்மாக்களின் சீசன் போல.. (ஐயோ மக்களே.. இதில் அரசியல் 0%: மற்றபடி சினிமாதான்.. சினிமாமட்டுமேதான்! ) மோசமான நடத்தையுள்ள அம்மா ’நான்’ விஜய் ஆண்டனிக்கு வாய்த்ததை போலவே இந்த ’ப.வ’ ஜானிக்கும் (யுவராணி) வாய்த்துள்ளார்.  விளைவு, அவர் அப்பா தான் அதீத பாசம் காட்டும் மகனை அம்போவென விட்டுவிட்டு தற்கொலை செய்துக்கொள்கிறார். அந்த பிணமான அப்பாவின் கோரமுகத்துடன் தொங்கும் கால்களை காலைவரை கட்டிபிடித்து அழுது, இடையிடையே அதிரும் மின்னல் இடியினால் அப்பொது பிடிக்கத்துவங்கும் மனநலக்குன்றல் படத்தில் அவ்வப்போது இடி இடிக்கும்போதெல்லாம் அதிகமாகிறது. இன்னும் கொஞ்சம் படத்தை நீட்டியிருந்தால் நமக்கும் இதே பிரச்சினை லேசாக துவங்கியிருக்கும் போல. அநாவசிய காட்சி நீட்டல்கள்.


ஹீரோ ஜானிக்கு இதுபோலான சமயங்களில் எல்லாம் அருகில் இருக்கும் மிருகம் அல்லது அரவங்களின் குணாம்சம் ஒட்டிக்கொள்கிறது. இந்த மேட்டரை சொல்லிதான் டைரக்டர் ப்ரொட்யூசரை ஒப்பேத்தியிருப்பார் போல. இப்படி நிஜமாகவே ஏதேனும் வியாதி இருக்கிறதா? என லாஜிக் வகையறாக்களை பார்க்கத்துவங்கினால் படத்தின் பல இடங்களில் குச்சியினை வைத்து கிளற வேண்டி வரும்.

அப்புறம் காதலி கண்ணில் பட இவருக்கும் காதல் புரிபட துவங்குகிறது. அந்த காதலியும் பெற்றோரை இழந்து ஹீரோ இருக்கும் ஃப்ளாட்டில் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். ஒரு நிலையில் காதலிக்கு நேரும் பிரச்சினையிலிருந்து காப்பாற்றி அவளை தான் விரும்பிய படி (அல்லது) அடிக்கடி புலம்பியதுபடி, தான் போக நினைக்கும் காட்டுக்கே அவளை அழைத்து போக திட்டமிடுகிறார் ஹீரோ. அந்த நேரம் அவன் அம்மா யுவராணியின் காதலன் லிவிங் டுகெதருக்கு இவர்கள் வீட்டுக்கே வந்து சேர.. அவரை கோபத்தில் தாக்கி.. குறுக்கே வந்த அம்மாவையே போட்டுத்தள்ளிவிட்டு கிளம்ப, போலீஸ் வர, ரத்தக்களறியுடன் வரும் ஜானியுடன் வர நாயகி மறுக்கிறார்.

இந்நிலையில் இவரைவிட கொஞ்சம் முத்திய (வயசிலும்.. மனக் கோளாறிலும்..) ஒரு ஆள் இவருக்கு உதவி செய்கிறார். அப்புறம் ஹீரோ என்னவானார், காதலி என்னவானாள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிய அணுகவும் அருகில் ப.வ ஓடும் தியேட்டர்களை.

இயக்குனருக்கு சரக்கு போதாது போல. சொல்ல வந்ததை சவ்வுமிட்டாய் போல இழுத்து நம்மை சோதனைக் குழாய்க்குள் போட்டு குலுக்கி நுரை தள்ள வைத்துதான் வெளியே அனுப்புகிறார்.

நன்றாகவே இருந்தாலும் திணிக்கப்பட்ட பாடல்கள் சலிப்பையே உண்டு பண்ணுகின்றன. இன்னும் கொஞ்சம் அங்கங்கே வெட்டியிருக்கலாமோ என தொன்றுகிறது.   

முதல் பாதியில் மெதுவாக நகரும் கதை, விஷுவலில் சொல்லப்படும் காட்சிகளையே வசனங்களிலும் விளக்க முனைந்திருப்பது, பெரிதாக ஈர்க்காத வசனங்கள், திட்டமிடாத காட்சியமைப்புகள், நாடகத்தனமான துணை நடிகர்களின் நடிப்பு என நிறைய மைனஸ்களை தாண்டியும் படத்தில் சில பிளஸ்கள் இருக்கவே செய்கின்றன.

ஒரு கில்மா படத்துக்கான டைட்டிலை வைத்த கையோடு, ஷகிலாவை ஓரம் கட்டி கால்ஷீட்டை வாங்கி பெட்ஷீட்டை விரித்து படம்பிடித்திருந்தால் ஒருவாறாக மனசை தேத்திக்கொண்டு வீடு திரும்பியிருக்கலாமோ?.

ஜானியின் காஸ்டிங் என்னவோ பல முன்னணி ஹீரோக்கள் செய்த (தெ.திருமகள் -விக்ரம், குணா –கமல் மற்றும் நம்ம செல்வராகவனின் –அனைத்து ஹீரோக்களும்) குணாதிசயங்களையே நினைவு ‘படுத்துகின்றன. வேறு ஏதேனும் புதிதாக யோசித்து இருக்கலாம்!

போஷாக்கான பாசம் கிடைக்காத நாலரை பால் அர்ஜூன்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் சமூக அக்கறை மட்டுமே படத்தின் மீது நாம் வைக்கும் கொஞ்ச அக்கறைக்கான காரணமாய் இருந்திடக்கூடும்.

Wednesday, August 15, 2012

அட்டைக்கத்தி -ஒரு மொன்னைப் பார்வை


         மதுபானக்கடையின் ஹேங் ஒவர்  தீரும் முன்னர்  ’ஒரு படம் பார்த்துவிடலாமே’ என்ற யோசனை உச்சிவெயில் நேரத்திலேயே ஊற்றெடுக்க, மாலை  தனிக்குழு கூட்டி அப்புறம் தனியாக  நிற்கிறோமே என்ற ஞானம் ஊற்றெடுக்க நேராக போய் நின்ற இடம்.. கோவை கே.ஜி.. ஸ்க்ரீன் 3.

பல நாட்களுக்கு பின்னர் நமக்கிருக்கும் ரிலையன்ஸ்* அலர்ஜியை சட்டை செய்யாது இந்த முறை தியேட்டருக்குள் நுழைந்தால், இருக்கைகள் பல இரு கைகளையும் இழந்து எண்ணை தலைகள் உரசிய
அட்டுடலுடன் காட்சியளித்தன. வெளிய என்னதான்  செக்யூரிட்டி பில்டப் கொடுத்தாலும்.. உள்ளே உரல்லதான் இடிச்சிகிட்டு இருக்கிறார்கள் பில்டப் பெருமாள்கள். (* ரிலையன்ஸ் எடுத்த புதுசுல இவங்க போட்ட ஆட்டம்.. சாமீ.. )

ஒரு வழியாக சரியான நேரத்திற்கு சற்று பின்னர் படம் துவங்கியது.

2000மாவது ஆண்டில் (கி.பி லதான்..) கதை துவங்குகிறதே அதனால் ஏதேனும் ஸ்பெஷலாக இருக்குமோ என்று கண்ணை உருட்டி எதையும் தேடவேண்டாம்.. கொஞ்சம் பழய அட்மாஸ்பியர் அவ்வளவே.

அச்சு அசலாக, அந்த நாட்களில் சென்னையின் அசலூராக இருந்து, இன்று ரியல் எஸ்டேட்  , க்களால் மத்திய சென்னைக்கு வெகு அருகில் சுமார் அறுபது கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமம்..

அங்கிருந்து தினமும் அட்டெம்ட்டுக்கு டுடோரியல் போகிறேன் என்று ’’காட்சி’’  கொடுத்துவிட்டு பஸ்ஸில் கிளம்பி  கண்ணில் கிடைக்கும் சுமாரான பெண்களை எல்லாம் காதல் வலைக்குள் வீழ்த்த பிரயத்தனம் செய்யும் சுமாரான இளைஞன் தினகரன். கடைசிவரை அவர் டுடோரியலை கண்ணில் காட்டாதது ஒரு ஆறுதல்.  கிளிஷேக்கள் தவிர்ப்பிற்காக இருக்கலாம். (புதுமுகம் தினேஷ் - நடிப்பில் அறிமுகம் என்பது கொஞ்சம்
ஆச்சரியம்தான். தம்பி நல்லா வருவே.. போகும்போது ஒரு டீ சொல்லிட்டு போ!)

எல்லா விஷயங்களிலும் ஓவர் பீலா.. கொஞ்சம் புருடா என கையாளும் பார்ட்டி மண்ணைக்கவ்வும் விஷயங்களில் கூட  வானளாவ ராக்கெட் விடும்போது ரசிக்கவைக்கிறார்.

இவர் பஸ்ஸில் வரும் பெண்களை மடக்க மேற்கொள்ளும்  அதிகப்பட்ச சாகஸமே ஃபுட்போர்டு அடிப்பதுதான். அதனையே  குலத்தொழில் போல செய்து வருகிறார்.

அதிலும் சில பல இடர்கள்.  திலும் வந்து சிக்குகிறார் உருட்டும் விழிகளுடன், தாவணியில், இயல்பான அவசியமான அழகுடன் பள்ளி மாணவி பூர்ணிமா.
பூரணியிடம் காதலை இன்றாவது சொல்லிவிடுவேன் என்று கிளம்பி பக்கதில் சென்றதும் அவள் ’அண்ணா’ என்று அழைக்க,  வெறுத்துப்போய் நிற்பவன் கொஞ்சம் வினாடிகளிலே டேக் இட் ஈஸி என கிளம்பியவுடன் அடுத்து தன்னை லுக்கு விடும் பெண்ணை டார்கெட் செய்ய..  மனசாட்சி மணியடிக்கிறது. அதனால் வாலண்டியராக சோகத்தை வரவழைக்க முயற்சி செய்து, தோற்றுப்போய், சிரித்து,  நான் ’இப்படி’த்தான் என நம்மிடம் சொல்லிவிடுகிறான்.

படத்திற்கு ஏன்  ’அட்டகத்தி’  என யோசிப்பவர்களுக்கு இயக்குனர் வைத்திருக்கும் ஒரு மொக்கையான காரணத்தை உங்களிடம் சொல்லி சுவாரஸ்யத்தை குலைக்க விரும்பவில்லை.

அதன் பின் ஒரே போல் உடையணிந்து வேலைக்கு செல்லும்  நதியா திவ்யாக்களை தன் அடுத்த வலைவீச்சில் இழுத்துபோட கிளம்புகிறார். அவர்களில் ஒருவரை மனமார(ற) தேர்வுசெய்து அவர்கள் ஊரிலேயே சொல்லப்போய் அடிவாங்கி பிழைத்து ஓடி வருகிறார். அப்படிஓடி வரும் வேகத்திலேயே உள்ளூர் கராத்தே மாஸ்டரிடம் சேர்ந்து  அவரிடம் பயிற்சி எடுக்கும் காட்சி அதகளம்.  அப்புறம் அங்கிருந்தும் பேக் அப். 

கடைசியில் ஒருவழியாக இருந்த ஒரு ஆங்கிலத்தை பாஸ் செய்து கல்லூரியில் சேர்ந்து ரூட்டு தல ஆகிறார்.

அங்கே மீண்டும் பூர்ணிமாவே வந்து நிற்க அதிர்ச்சி, சந்தொஷம், ஆச்சர்யம்.  நமக்கும்தான். அப்புறம்  அவருக்கும் பூர்ணிமாவுக்கும் காதல் வந்ததா இல்லையா என்பது மீதிப்படம். 


நாயகனின் அப்பா, அம்மா, அண்ணன் நண்பர்கள் என அனத்துக் பாத்திரங்களும் யதார்த்ததை வழியச்சுமந்து இருக்கின்றன. அளவு, அழகு.

இயக்குனர் யாரும் எதிர்பாராத விஷயங்களையே காட்சிகோர்வையாக வைக்கவேண்டுமென மெனக்கெட்டு அமைத்திருப்பார் போல.  படம் முன்பாதி ஜெட்டு போல் கிளம்பி  ஏரோப்ளேனாக மாறி கடைசியில் நம் பொறுமையை சோதித்து கட்டைவண்டியாக வந்து சேர்கிறது.

புனைவுகளும், சினிமாத்தனமும் இல்லாத அருமையான உணர்ச்சி பதிவுகள்,  விடலைக்காதல், எல்லாவற்றையும் அழகாய் சொன்ன இயக்குனர் கதைய ட்விஸ்ட்டு பண்ணுகிறேன் பேர்வழி என ஹீரோவை

ஒருதலையாக காதலிக்கும் பெண்ணை அயிட்டம் ரேஞ்சுக்கு உரசவிட்டு.. (அயிட்டமே இப்படி ஓசியில் உரசுமா? என அனுபவசாலிகள் பின்னூட்டம் போட்டா தேவலாம்..) குழப்பியடித்து மட்டுமல்லாது
அதன் பின்னான காட்சிக்கோர்வைகளை காற்றில்  விட்டுவிட்டார்.

கல்யாணமாகி இன்று ஓரிரு குழந்தைகளுக்கு அப்பனாகியிருக்கும் ஆளா நீங்கள்.. அப்படியென்றால் இந்த ஹீரொவின் செயல்களின் சாயல் உங்களிடம் கொஞ்சமேனும் இருக்கும்.

தலைப்புக்கு நியாயம் செய்தாலும், கிளைமாக்ஸை இன்னும் கவனமாக செதுக்கியிருந்தால் ஒரு சூப்பர் ’சூரிக்கத்தி’ கிடைத்திருக்கும்.

பின்னணி இசை ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். (கம்ப்யூட்டரில் இசைக்கும் காலத்திலும் பின்னணி இசை என்பது சரிதானா? ).  'ஆசை ஒர் புல்வெளி , 'ஆடி போனா ஆவணி' பாடல்கள் நன்று.  நடுக்கடலிலே.. கானா தாளம் போடவைக்கும்.

தாராளமாய் தியேட்டரில் சென்று பார்க்கலாம்.. ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது .

Monday, August 6, 2012

மதுபானக்கடை - குப்பை அலசல்


ஒரு குவாட்டர் அடிக்காம தியேட்டருக்குள்ள போனா அப்புறம் உங்க உசுருக்கு உத்திரவாதமில்ல..

ரொம்ப ராவா இருக்கு சார்..     படத்த சொன்னேன்.

 அட! டைட்டில வித்தியாசமா போடுறானுங்களேன்னு நிமிந்து ஒக்காந்தேன் சார்.. இடுப்பு புடிச்சுகிச்சு.. பக்கத்து சீட்ல உள்ளவரு, நான் என்னமோ ஒரு ஆர்வக்கோளாறு மாதிரியும்.. ஆசப்பட்டு நுனி சீட்டுல ஒக்காந்து படம் பாக்குற மாதிரியும் கடுப்புல என்னை பாத்துட்டே இருந்தாரு.. அத விடுங்க சார்..

கதையதான் தேடாதீங்கன்னு ஆரம்பத்துலயே சொல்லிட்டாங்க.. ஆனா என்ன சொல்ல வர்றாங்கன்னு கடைசி வரைக்கும் சொல்லவேயில்லன்றேன்..

கதயத்தான் சொல்லவரலியே.. தண்டக்கருமாந்திரம் காதலயாவது உருப்படியா சொன்னானுங்களா..

பல நேரங்கள்ல மூஜிக் போடுறவரு போடனுமா வேண்டாமான்னு கன்ஃப்யுஷன்ல போடாம விட்டது, படம் நீளமா இழுக்குதோன்னு ஃபீல் பண்ண வெக்குது..


 கலந்துக்கட்டி கில்லி மாதிரி சொல்ல வேண்டிய லொக்கேஷன்ல படம் நொண்டியடிச்சிகிட்டு இருக்கு.

ஆரம்பத்துல ஊரவுட்டு ஓடிப்போற காதல் சோடிக்கு பின்னாடி டி பெருசா ஏதும் பிரச்சினை இருக்குமோன்னு பதற வெச்சுட்டு படத்த ஆரம்பிச்சு என்னன்னமோ சொல்ல வந்து எதயுமே முழுசா சொல்லாம போயிட்டாங்க..

அச்சு அசலா பல குடிமகன்களை காட்டி படம் முழுக்க நெரப்பி வெச்சிருக்காங்க. ஆனா அதுனாலயே ரசிகர்களுக்கு யார்மேல ஏறி படத்துக்குள்ள போறதுன்ற கொழப்பம் தீர்றதுக்குள்ள படம் பொசுக்குன்னு முடிஞ்சு போயிடுது.

 நல்ல விஷயம் நெறய சொல்லியிருக்காங்க.. ஆனா ஒரு கோர்வையா  சொல்லாதது சீக்கு விழுந்த கோழித்தல மாதிரி அப்படி இப்படின்னு ஆடிக்கிட்டே இருக்கு.

சரியா சொல்லனும்னா பெரிய குப்பத்தொட்டிக்குள்ள பிச்சக்காரன ஏத்திவிட்டுபுட்டு ஏதாவது எனக்கும் வீசுறான்னு கெஞ்சிட்டு கீழ நின்னா வந்து விழுமே...   அது மாதிரிதான் நாமளும் ஸ்க்ரீன பாத்துகிட்டு இருக்கோனும்..தெவப்பட்டது வரும்போது பிடிச்சுக்கனும்..

கேமரா நல்லாருக்கே சார்? ஸோ வாட்.. அத எங்க கொண்டுபோயி வெச்சுக்கறது..  நெறயா டயாலாக் சூப்பரா இருக்கே சார்? அத வேணா தஞ்சாவூர் கல்வெட்டுல குறிச்சு வெச்சுக்கலாம் சார்..

ஆனா ஒன்னு சார்,  ஆ.. ஊன்னா டர்ர் புர்ர்ன்னு டெர்ரரா மூஜிக் போட்டு என்னவோ பயங்கரமா நடக்கபோறா மாதிரி கிலிய கெளப்பிவிட்டுட்டு.. பொளக்கட்டீர்னு சீனை மொக்கயா முடிச்சுடுறாங்கோ.. 

கெவுர்மெண்ட்ட்ட நெறய கேள்வி கேக்குறாங்கோ.. கம்யூனிசம் சோஷலிசமெல்லாம் பேசுறாங்கோ.. ஆனா மலப்பாம்புமாதிரி எடுக்கப்படவேண்டிய படம் நத்தை மாதிரி நம நமன்னு ஆயிடுது.

போதும் சார் இதுக்குமேல எனக்கு பொறுமையில்ல.. 

இன்னும் வெலாவரியா வசனம் முதற்கொண்டு தெரியனும்னா கீழே உள்ள லின்க்க க்ளிக்குங்கோ.. தெரிஞ்சுக்கலாம்..

http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html    

 நன்றி: சென்னிமலையார்


மச்சி இன்னொரு கோட்டர் சொல்லேன்.... 



ப்ளாக்லயாவது சொல்லேன்..  

Saturday, June 2, 2012

மனம் கொத்தி பறவை - Olympia Movies


கிச்சு கிச்சு மூட்டும் இறகுகள்..


டிஜிட்டல் படங்களின் நான்-ஸ்டாப் வருகைக்கு பின்னர் பலமுறை பலமாக பத்து இன்ச் ரிவிட்டுகளை பின்னால் வாங்கிய அனுபவங்களால்,  பறவை எதுவானாலும் இரை நாம் ஆகி விடக்கூடாது என்கிற மேலான சிந்தனையின் வெளிப்பாடாக,  சமீப காலமாக (சுமார் ஒன்றரை வாரமாக..)   மொக்கை ஃபிலிம் க்ளப்பு (@athisha @narain @kingvishwa @lucky @louiscrandel... ) நண்பர்களிடம்கூட கூட்டு, பொரியல் என எதுவும் வெக்காம சுற்றிக்கொண்டிருந்தேன். இந்நிலையில் நேற்று திடீரென ஞானம் பெற்று, ”இப்படி கடமை உணர்ச்சி செத்துபோயி.. தியேட்டருக்கு போகாமலிருந்தா என்னவாகும்..”  தங்க தமிழ் திரை உலகை யார்தான் காப்பாற்றுவது?”  என என் விரதத்தை கைவிட்டு தஞ்சமடைந்த இடம்.. கோவை காவேரி திரை அரங்கம்..  
                                                (ஏ.சி போட்டாமட்டும் போதாது..  மூட்டை பூச்சி மருந்தும் போடுங்கப்பா.    நைட்டு ஷோ டைம் 10:10pm லிருந்து 9.40க்கு மாத்திட்டாங்களாம்.. )

  நமக்கு மட்டும் லேட் ஷொ ஆகிடுச்சே.. என்று அவசரமாக டிக்கட் வாங்கி..   வைகுண்டத்துக்கே டிக்கட்டு வாங்கும் வேகத்தில் மூன்றவது மாடிக்கு படியேறி மூச்சு முட்டும் வேகத்துல உள்ளே வலதுக்காலை வெச்சு நுழைந்தேன்..

         நான் நுழைவதற்குள் ரசிகர்கள் கதைக்குள் நுழைந்து இருப்பார்கள் போல..  கொத்து கொத்தாய் கோரஸாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். 

கதை ................................................................?                

       அப்படியெல்லாம் ஒன்றும் புதிதாக தென்படவில்லை.. காதலும் காதலைச்சார்ந்த மரியாதைகளின் கலவையான சமாச்சாரம்தான் படத்தின் கதைக்களம் .  
           கட்டிட காண்டிராக்டர் இளவரசுவின் மகன் கார்த்திகேயன்
எதிர்வீட்டில் உள்ள வசதி படைத்த முரட்டு அப்பாவையும் ,கடா மீசை சித்தப்பாக்களையும் கொண்ட, தாயை சிறுவயதில் இழந்த ரேவதியை காதலிக்கத்துவங்குகிறார்.  பன்னெடுங்காலமாக தமிழ் படங்களில் வருவது போல திடீரென்று ரேவதிக்கும் இன்னொரு முரட்டுபயலுக்கு நிச்சயம் செய்கிறார்கள்.. 
          இப்போதுதான் சிவ கார்த்...(பேர சுருக்கச்சொல்லனும்..) ..திகேயனுக்கு காதல் பொத்துக்கொண்டுவர கோவில் மொட்டைமாடியில் தன் ஒருதலைக்காதலை காதலி ரேவதியிடம் (புதுமுகம்.. ஆத்மியா..?  ) சொல்லி,  ஒரு எதிலும் சேராத மந்தமான ரியாக்‌ஷனை பதிலாக வாங்குகிறார். 
  
         அப்புறம் திடீரென வரும் பாம்பே பாய்ஸ் (நந்து, சாம்ஸ்) சிவகார்த்தியின் உள்ளூர் நண்பர் சூரி அண்ட் கோவின் தகவல் உபயத்தால் ஒரு புது உபாயத்துடன்(?) மப்படித்து மட்டையாகிப்போன கார்த்திகெயனையும்.. ஆத்மியாவையும் கடத்திச்செல்ல அப்புறம் நடப்பதெல்லாம்...  உங்களுக்கே புரிந்திருக்கும். 


படம் எப்படி?

        உங்களின் அதிமேதாவித்தனத்தை அஞ்சு ரூவா கோணிப்பையில் வைத்து அக்குளுக்குள் சுருட்டிக்கொண்டு தியேட்டருக்குள் போனால்..  தாராளமாய் போய் ஏராளமாய் சிரித்துவிட்டு வரலாம்.

           இடை இடையே ’கொல பண்ண ஆள் ஈசியா கெடச்சுடறானுக கொத்தனார் வேலைக்குத்தான் நாயா அலைய வேண்டிகெடக்கு’  போன்ற அர்த்தபுஷ்டியான!!!  வ்சனங்களும் தென்படலாம்.

           சிங்கம்புலி, சூரி கூட்டணியினரின் காமெடி முன்பாதி நகர்வுக்கு பயன்படுவது போல..  பின் பாதி காதல்காட்சிகள் கவனம் ஈர்ப்பது இல்லை. இதற்கு ஆத்மியாவின் ஆன்மா இல்லாத ரியாக்‌ஷன்கள் காரணமா? என சி.பி.ஐ வைத்துதான் விசாரிக்க வேண்டும் 
                                    (புண்ணாக்கு ஊழலுக்கெல்லாம் சி.பிஐ வைக்கும்போது.. இதுக்கெல்லாம் வெச்சா குடியா முழுகிடும்??) 
      
       மொத்தத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாது தியேட்டருக்குள் போனால்.. ’கொஸாக்ஸி பசப்புகல்’ பார்த்த பரவசம் கிடைக்கும்.. 

       காமெடிக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்..    கதைக்கு இன்னும் வினைக்கெட்டு இருக்கலாம். (’வினைக்கெட்டு’ Courtesy by: புதிய தலைமுறை TV)

நடிப்பு:
       
        சிவகார்த்திகேயனை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம்.. அல்லது அவரது அவுட்புட்டே அவ்வளவுதானா..??  
       
         ’மறுபடியும் ஹீரோவா நடிக்கனும்னா அவர் தன் முகத்தில் பஞ்ச ஸ்தானத்தில் அலகு குத்தி, குத்தின அலகுகள் தெரிச்சுப் போகுமளவுக்கு தேர் இழுத்தால் மட்டுமே முக உணர்ச்சிகளில் கொஞ்சமேனும் முதிர்ச்சி தெரிய வரும்’ னு காசிமேடு வெட்னரி டாக்டர் அட்வைசியிருக்கார். 

         ஆத்மியா..  ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..  ரெண்டு பாட்டு ஒரு அய்ட்டம் ஸாங்குன்னு நெனச்சிட்டு வந்த அம்மினிய நடிக்கச்சொல்லி நச்சரிச்சிருப்பாங்க போலிருக்கு.. 

         இமானின் பாடல்கள் பருவாயில்லை.. பிண்ணனி இசை அவ்வப்போது முன்னணியில் வந்து இம்சிக்கிறது. மற்றபடி நேர்த்தி(கடன்).

  அப்புறம்....     எல்லாம் சுபம்! 


ட்ரெயிலர இங்க கொத்துங்க.. 
http://www.cinemaindya.com/south-movies/manam-kothi-paravai