Saturday, July 20, 2013

மரியான் - திரைக்க(தை)டல் அலசல்..


மரியான் - திரைவிமர்சனம்
.
CAST :  தனுஷ் (மரியான்),  ’பூ’பார்வதி (பனிமலர்),  ’நண்டு’ஜகன் (சாமி),  சலிம் குமார் (தொமய்யா ), உமா ரியாஸ்கான் (ஷீலி),  விநாயகன் (தெக்குரிஸ்ஸி),   அப்புகுட்டி (சக்கரை),   இமான் அண்ணாச்சி அப்புறம்.. ’டக்பெத்  ட்வே’ - ஆப்ப்பிரிக்கா வில்லன் மற்றும்  பலர்..

ஆக்கம்:  பரத்பாலா- இயக்கம்   A.R.R - இசை   ஒளிப்பதிவு : மார்க்  கோனின்க்ஸ்       (பெல்ஜியத்துக்காரர்)   தயாரிப்பு - ’ஆஸ்கார்’  வேணு ரவிச்சந்திரன்



திறமையான  நடிகர் பட்டாளம்,  நல்ல தயாரிப்பு நிறுவனம், துறை அனுபவம் வாய்ந்த இயக்குனர் என பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி சமயம் பார்த்து தியேட்டருக்குள் நுழைந்திருக்கிறான் ‘மரியான்’ .

திருநெல்வேலி கடலோர கிராமத்து இளைஞன் மரியான் என்கிற தனுஷ். கொம்பன் சுறாவையே வேட்டையாடும், தாயை மதிக்காத, நேரம் பொழுது முழுவதும் சுருட்டுப்பிடித்துக்கொண்டு, குடித்துக்கொண்டு திரியும் பாத்திரத்தில் அலைகிறார்.

காரணமே தெரியாமல் இவர் மீது கடும் காதலுடன்.. ’பனிமலர்’ எனும் பார்வதி.  இவருக்கு வேலையே தனுஷை கண்ட பொழுதெல்லாம் கசிந்துருகி காதல் பகிர்வதுதான்.

இயக்குனர் பரத்பாலா(1963)  என்ன நினைச்சு சொன்னாரோ, ஆஸ்கார் ரவிச்சந்திரன் கேமராவ தூக்கிட்டு கெளம்புங்கன்னு சொல்லியிருப்பார் போல.. போற வழியில ஸ்க்ரிப்ட் பேப்பர் நிறைய உருவி விழுந்துடுச்சு போல.. 
 
வில்லனுக்கு ஹீரோயின் பட்ட கடனை தீர்க்க ஹீரோ வெளிநாடு (சூடான்) போயி பொழப்ப பாக்குறாரு. இங்க நல்லாதானே சம்பாரிக்கிறாரு?? பின்னே ஏன்னு கேக்காம இருக்க முடியல. சூடான்ல போயி வேலைக்கு போறவழியில ஒரு தீவிரவாதி கும்பல் இவரை கடத்த..  தப்பிச்சு வந்தாரா?? இதுதான் கதை!.  இந்த ஒன் லைன், ஒரு நூற்றாண்டுக்கு முன் வந்த சினிமாவுக்கும் பொருந்தும்.

ஹீரோ கேரக்ட்ரைஸேஷன்ல பயங்கர குழப்பம். கதைல பல இடங்கள்ல லாஜிக் பொந்துகள், பல நேரங்கள்ல பல பல ரியாக்‌ஷன் மட்டுமே வாங்கப்பட்ட ஹீரோயின், சலிப்பை உண்டாக்கும் காட்சி அமைப்புகள் என பல பிரச்சினைகளுக்கு நடுவே பெரிய ஆறுதல் தனுஷின் முதிர்ந்த நடிப்பும், அதற்கு ஈடுகொடுக்கும் பார்வதியும், அங்கங்கே ஏ.ஆர்.ரகுமானும்தான். 

நல்ல கேமரா - அட்டகாசமான பதிவு. பாலை நிலங்களில் பல இடங்கள் ப்ளீச் - ப்ரொஜெக்‌ஷன் தரம்தான் மோசமோ.. கோவை யமுனா தியேட்டர். அடப்பாஸ் தியேட்டர்.. ஏசி போடாம கொன்னுட்டானுக. இதயெல்லாம் கேக்க ஆளே இல்லையா??.  




ஆரம்பத்தில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட இருவராகட்டும், பின் பாதியில் சூடானில் கடத்தப்படும் தனுஷ் என்ற பிரஜைக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் இந்திய அரசாங்கம் என ஒன்று இருப்பதே தெரியாது போலும். 

நெருங்கி வரும்போதெல்லாம் தனுஷிடம் தேவையின்றி உதைபடுகிறார் பார்வதி. வக்ரமான காட்சியமைப்புகள் எரிச்சலை வரவழைக்கின்றன. முன் பாதியில் கடல், பின் பாதியில் பெரும் பாலை என காண்ட்ரவர்ஷியல் பேக் ட்ராப்பில் புயலாய் செல்ல வேண்டிய கதை வறட்டுத்தனமாய் நகர்வது எரிச்சலை உண்டாக்குகிறது. 


வசனங்கள் உச்சரிப்பில் திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை என பல ஊர் வாடை குழப்பம் வேறு. பொறுப்பற்ற படைப்பு. 

கடல்தான் நாயகனின் தாய். அங்குதான் அவன் முழுபலத்துடன் இயங்குவான் என்ற கான்செப்ட்டிற்காக ஹீரோவையும், வில்லனையும்  கடல் கண்ணில் படும்வரை உருட்டி புரட்டி கொண்டுவந்து சேர்த்து மோதவிட்டிருக்கிறார்கள். 

பாலை நெடுக வரும்  ஹீரோவிற்கு பாலைவனத்தில் இடது காலில் காயம் உண்டாகிறது. கால்கட்டை வலதுகாலுக்கும் இடது காலுக்கும் மாற்றி மாற்றி குழப்பும் கண்டின்யுட்டி மிஸ்டேக் ஒன்று போதும் படத்தின் பெர்ஃபெக்‌ஷனை எடுத்துச்சொல்ல.. 

நடுவுல நம்மூரு ஸ்டைல்ல ஆப்ரிக்கா வில்லன்களுக்கு ஒரு அயிட்டம் ஸாங்கு கொடுமை வேற.

டைரக்டர்களின் நடிகன் தனுஷ்.. இந்த படத்தில் இயக்குனரின் மொக்கைத்தனம் புரிந்து போய் ஒரு நிலையில் தானே நடிக்கத்துவங்கியிருப்பார் போல.. சமாளித்து படத்தை கடைசிவரை சுமந்து சென்றுள்ளார். அவ்வளவுதானே அவரின் எல்லை. 

ஒரு நல்ல இயக்குனரின் கையில் கிடைத்திருந்தால் மரியான் இன்னமும் சிறப்பாக வந்திருப்பான் போல. 

பின்னணி இசை - சுமார் ரகம்தான்.  பாடல்கள்தான் படத்தின் ப்ரொமோஷனுக்கு பலம், அதேதான் பார்க்கையில் பலவீனம்.. 

படம் ஒருபுறம் நடக்க, மக்கள் தியேட்டரில் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கும் அளவிற்குதான் படத்தின் சுவாரஸ்யம்.

முப்பது கோடி பட்ஜெட் - இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்களிடம் கொடுத்தால், பத்து நல்ல படங்கள் கிடைக்கும் - இது அந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் அவர்களுக்கான தகவல்.