Wednesday, August 25, 2010

நான் புடிச்ச மான்..



இது பக் வகையைச்சேர்ந்த மான்,


இதைப்பார்ப்பது அரிது...


இதை தனியாகப்பார்ப்பது அதனினும் அரிது...


இணையாகப்பார்ப்பது இன்னும் அரிது...


- மழை பெய்து ஓய்ந்த ஒரு நொடியில் 


  கிடைத்த கிளிக்...

Sunday, August 15, 2010

குடைக்குள் தேவதை,,

ஒரு மழை நாளில்
களங்கமில்லா அன்பையே
பரவசம் என்றுணர்த்துவதற்கு
என் பள்ளிக்கும் ஒரு குட்டி தேவதை
பிரவேசித்தது - உங்களுக்கு நேர்ந்ததைப்போலே....

ஒவ்வொரு விடுமுறை நாளிலும் மறந்திடுவேன் அவளை....

அடுத்த பள்ளி நாட்களில்
மறுமுறை அவளை பார்த்திடும்போது
மீண்டும் அந்த பரவசம்...
இதில் இடைவெளி ஏனென்று யோசித்து
நிரப்பிட நினைத்திடாத
என் குழந்தை கணங்கள் இனித்தது எனக்கும் - உங்களைப்போலவே....

ஆனால் பின்னொரு பிரிவின் பின்னர்
அந்த தேவதை வரவே இல்லை...

தந்தைக்கு பணிமாற்றமென்று...
பின்னாளில் யாரோ சொன்னார்கள்.

மீண்டும் அந்த தேவதைப்பரவசம்
கிடைக்கும் என்று
என் காத்திருத்தல் தொடர்கிறது
இன்று வரையில் - உங்களைப்போலவே.

எகத்தாளம்





எலும்புக்கூட்டின் முந்தைய STAGE-ல்
எத்தியோப்பிய சிறுமி...
“I DON'T CARE” என்றாள்
எகத்தாளமாய்...
யாரோ
“அதிகமா சாப்பிட்டா
குண்டாயிடுவே!”
என்று சொன்னார்களாம்!