Monday, August 6, 2012

மதுபானக்கடை - குப்பை அலசல்


ஒரு குவாட்டர் அடிக்காம தியேட்டருக்குள்ள போனா அப்புறம் உங்க உசுருக்கு உத்திரவாதமில்ல..

ரொம்ப ராவா இருக்கு சார்..     படத்த சொன்னேன்.

 அட! டைட்டில வித்தியாசமா போடுறானுங்களேன்னு நிமிந்து ஒக்காந்தேன் சார்.. இடுப்பு புடிச்சுகிச்சு.. பக்கத்து சீட்ல உள்ளவரு, நான் என்னமோ ஒரு ஆர்வக்கோளாறு மாதிரியும்.. ஆசப்பட்டு நுனி சீட்டுல ஒக்காந்து படம் பாக்குற மாதிரியும் கடுப்புல என்னை பாத்துட்டே இருந்தாரு.. அத விடுங்க சார்..

கதையதான் தேடாதீங்கன்னு ஆரம்பத்துலயே சொல்லிட்டாங்க.. ஆனா என்ன சொல்ல வர்றாங்கன்னு கடைசி வரைக்கும் சொல்லவேயில்லன்றேன்..

கதயத்தான் சொல்லவரலியே.. தண்டக்கருமாந்திரம் காதலயாவது உருப்படியா சொன்னானுங்களா..

பல நேரங்கள்ல மூஜிக் போடுறவரு போடனுமா வேண்டாமான்னு கன்ஃப்யுஷன்ல போடாம விட்டது, படம் நீளமா இழுக்குதோன்னு ஃபீல் பண்ண வெக்குது..


 கலந்துக்கட்டி கில்லி மாதிரி சொல்ல வேண்டிய லொக்கேஷன்ல படம் நொண்டியடிச்சிகிட்டு இருக்கு.

ஆரம்பத்துல ஊரவுட்டு ஓடிப்போற காதல் சோடிக்கு பின்னாடி டி பெருசா ஏதும் பிரச்சினை இருக்குமோன்னு பதற வெச்சுட்டு படத்த ஆரம்பிச்சு என்னன்னமோ சொல்ல வந்து எதயுமே முழுசா சொல்லாம போயிட்டாங்க..

அச்சு அசலா பல குடிமகன்களை காட்டி படம் முழுக்க நெரப்பி வெச்சிருக்காங்க. ஆனா அதுனாலயே ரசிகர்களுக்கு யார்மேல ஏறி படத்துக்குள்ள போறதுன்ற கொழப்பம் தீர்றதுக்குள்ள படம் பொசுக்குன்னு முடிஞ்சு போயிடுது.

 நல்ல விஷயம் நெறய சொல்லியிருக்காங்க.. ஆனா ஒரு கோர்வையா  சொல்லாதது சீக்கு விழுந்த கோழித்தல மாதிரி அப்படி இப்படின்னு ஆடிக்கிட்டே இருக்கு.

சரியா சொல்லனும்னா பெரிய குப்பத்தொட்டிக்குள்ள பிச்சக்காரன ஏத்திவிட்டுபுட்டு ஏதாவது எனக்கும் வீசுறான்னு கெஞ்சிட்டு கீழ நின்னா வந்து விழுமே...   அது மாதிரிதான் நாமளும் ஸ்க்ரீன பாத்துகிட்டு இருக்கோனும்..தெவப்பட்டது வரும்போது பிடிச்சுக்கனும்..

கேமரா நல்லாருக்கே சார்? ஸோ வாட்.. அத எங்க கொண்டுபோயி வெச்சுக்கறது..  நெறயா டயாலாக் சூப்பரா இருக்கே சார்? அத வேணா தஞ்சாவூர் கல்வெட்டுல குறிச்சு வெச்சுக்கலாம் சார்..

ஆனா ஒன்னு சார்,  ஆ.. ஊன்னா டர்ர் புர்ர்ன்னு டெர்ரரா மூஜிக் போட்டு என்னவோ பயங்கரமா நடக்கபோறா மாதிரி கிலிய கெளப்பிவிட்டுட்டு.. பொளக்கட்டீர்னு சீனை மொக்கயா முடிச்சுடுறாங்கோ.. 

கெவுர்மெண்ட்ட்ட நெறய கேள்வி கேக்குறாங்கோ.. கம்யூனிசம் சோஷலிசமெல்லாம் பேசுறாங்கோ.. ஆனா மலப்பாம்புமாதிரி எடுக்கப்படவேண்டிய படம் நத்தை மாதிரி நம நமன்னு ஆயிடுது.

போதும் சார் இதுக்குமேல எனக்கு பொறுமையில்ல.. 

இன்னும் வெலாவரியா வசனம் முதற்கொண்டு தெரியனும்னா கீழே உள்ள லின்க்க க்ளிக்குங்கோ.. தெரிஞ்சுக்கலாம்..

http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html    

 நன்றி: சென்னிமலையார்


மச்சி இன்னொரு கோட்டர் சொல்லேன்.... 



ப்ளாக்லயாவது சொல்லேன்..  

6 comments:

  1. ஒரு குவாட்டர் அடிக்காம தியேட்டருக்குள்ள போனா அப்புறம் உங்க உசுருக்கு உத்திரவாதமில்ல
    அட இந்த டைட்டில பாத்துட்டு பூரா பக்கிகளும் நல்லா ஊத்திட்டு நாலு பேரா தான் போயிருக்காங்க,
    ஆனா அவிங்களையே மதுபானக்கடைய பாக்க விடவில்லை,
    கொடுமை டா சாமி

    ReplyDelete
  2. Oru "Kudi"Maganin Pathivu.

    Hats Off to you sir.

    ReplyDelete
  3. வ குவார்ட்டர் கட்டிங் படம் பாத்துட்டு நேரா டாஸ்மாக் போய் ஒரு குவார்ட்டர் ஒல்ட்மங்க் அடிச்சோம்..அந்த தாகத்தையும் தவிப்பையும் இந்த இயக்குனர் உருவாக்க தவறி இருப்பது வருத்தத்துகுறியது. இருந்தாலும்..நாமளே இந்த படத்த ஊக்கு விக்கலன்னா..அது வரலாற்றுக்கு செய்ற பெரிய துரோகமாயிடும். இந்த படத்த இன்னும் பாக்கலை.

    இது மொக்க படம்ன்ற ஒரு காரணம் போதும்..படம் பாக்க ..விமர்சனம் எழுதனும்ல! (நல்ல படத்துக்கு விமரசனம் எழுததான் ஊருக்கு நாலு பேரு இருக்காங்களே!)தோ..பாத்துடுரேன்! :))

    அப்புறம் படத்துல ஒன்னுமே சொல்லவரலைன்னு சொல்லிட்டு, விமரசனத்தியலேயும் அதே பாணிய கடைபிடிச்சுருக்குற பதிவரோட கோணம் அருமையானது, அருங்கோணமானது - ங்கொய்யால..!

    மாப்ளைக்க்கு ஒரு குவாட்டர் ..பார்சல்ல்ல்ல்........!

    நட்புடன் - கட்டம் சரியில்லா கட்டதொர

    ReplyDelete
  4. படம் எனக்குப் பிடிச்சிருந்தது நண்பரே.....!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடித்திருந்ததுதான்.. ஆனால் சில ஒவ்வாமைகள்..

      Delete
  5. விகடன்ல 45 மார்க் போட்டிருக்காங்க.ஓவர்

    ReplyDelete