Friday, August 24, 2012

பதினெட்டு வயசு – ரிப்பேரான மனசு!



திரைவிமர்சனம்:

  [ Cast: Johnny, Gayathri   Director: Paneerselvam  Producer: S S Chakravarthy   Music: Charles   Bosco, Dinesh Kanagaratnam   / Cinematography: Shakthi / Editing: Anthony Gonsalves  / Art Direction: Sanjay Karan / Screenplay: Paneerselvam  / Action Direction: Rajasekhar ]

ரேணிகுண்டா இயக்குனரின் அடுத்த படைப்பு என்ற அடையாள முத்திரையை சுமந்து வரும்போதே லேசான சந்தேகம். ”சந்தன மரத்துக்கு எதுக்கு சைன் போர்டு விளம்பரம்?” அது நிஜமாகவே சந்தனமரம் எனும்போது!. நல்ல படமாக இருப்பின் முந்தய எல்கேஜி ஐடி கார்டை யூகேஜியிலும் சுமக்க வேண்டாமே?!. 

இது கெட்ட அம்மாக்களின் சீசன் போல.. (ஐயோ மக்களே.. இதில் அரசியல் 0%: மற்றபடி சினிமாதான்.. சினிமாமட்டுமேதான்! ) மோசமான நடத்தையுள்ள அம்மா ’நான்’ விஜய் ஆண்டனிக்கு வாய்த்ததை போலவே இந்த ’ப.வ’ ஜானிக்கும் (யுவராணி) வாய்த்துள்ளார்.  விளைவு, அவர் அப்பா தான் அதீத பாசம் காட்டும் மகனை அம்போவென விட்டுவிட்டு தற்கொலை செய்துக்கொள்கிறார். அந்த பிணமான அப்பாவின் கோரமுகத்துடன் தொங்கும் கால்களை காலைவரை கட்டிபிடித்து அழுது, இடையிடையே அதிரும் மின்னல் இடியினால் அப்பொது பிடிக்கத்துவங்கும் மனநலக்குன்றல் படத்தில் அவ்வப்போது இடி இடிக்கும்போதெல்லாம் அதிகமாகிறது. இன்னும் கொஞ்சம் படத்தை நீட்டியிருந்தால் நமக்கும் இதே பிரச்சினை லேசாக துவங்கியிருக்கும் போல. அநாவசிய காட்சி நீட்டல்கள்.


ஹீரோ ஜானிக்கு இதுபோலான சமயங்களில் எல்லாம் அருகில் இருக்கும் மிருகம் அல்லது அரவங்களின் குணாம்சம் ஒட்டிக்கொள்கிறது. இந்த மேட்டரை சொல்லிதான் டைரக்டர் ப்ரொட்யூசரை ஒப்பேத்தியிருப்பார் போல. இப்படி நிஜமாகவே ஏதேனும் வியாதி இருக்கிறதா? என லாஜிக் வகையறாக்களை பார்க்கத்துவங்கினால் படத்தின் பல இடங்களில் குச்சியினை வைத்து கிளற வேண்டி வரும்.

அப்புறம் காதலி கண்ணில் பட இவருக்கும் காதல் புரிபட துவங்குகிறது. அந்த காதலியும் பெற்றோரை இழந்து ஹீரோ இருக்கும் ஃப்ளாட்டில் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். ஒரு நிலையில் காதலிக்கு நேரும் பிரச்சினையிலிருந்து காப்பாற்றி அவளை தான் விரும்பிய படி (அல்லது) அடிக்கடி புலம்பியதுபடி, தான் போக நினைக்கும் காட்டுக்கே அவளை அழைத்து போக திட்டமிடுகிறார் ஹீரோ. அந்த நேரம் அவன் அம்மா யுவராணியின் காதலன் லிவிங் டுகெதருக்கு இவர்கள் வீட்டுக்கே வந்து சேர.. அவரை கோபத்தில் தாக்கி.. குறுக்கே வந்த அம்மாவையே போட்டுத்தள்ளிவிட்டு கிளம்ப, போலீஸ் வர, ரத்தக்களறியுடன் வரும் ஜானியுடன் வர நாயகி மறுக்கிறார்.

இந்நிலையில் இவரைவிட கொஞ்சம் முத்திய (வயசிலும்.. மனக் கோளாறிலும்..) ஒரு ஆள் இவருக்கு உதவி செய்கிறார். அப்புறம் ஹீரோ என்னவானார், காதலி என்னவானாள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிய அணுகவும் அருகில் ப.வ ஓடும் தியேட்டர்களை.

இயக்குனருக்கு சரக்கு போதாது போல. சொல்ல வந்ததை சவ்வுமிட்டாய் போல இழுத்து நம்மை சோதனைக் குழாய்க்குள் போட்டு குலுக்கி நுரை தள்ள வைத்துதான் வெளியே அனுப்புகிறார்.

நன்றாகவே இருந்தாலும் திணிக்கப்பட்ட பாடல்கள் சலிப்பையே உண்டு பண்ணுகின்றன. இன்னும் கொஞ்சம் அங்கங்கே வெட்டியிருக்கலாமோ என தொன்றுகிறது.   

முதல் பாதியில் மெதுவாக நகரும் கதை, விஷுவலில் சொல்லப்படும் காட்சிகளையே வசனங்களிலும் விளக்க முனைந்திருப்பது, பெரிதாக ஈர்க்காத வசனங்கள், திட்டமிடாத காட்சியமைப்புகள், நாடகத்தனமான துணை நடிகர்களின் நடிப்பு என நிறைய மைனஸ்களை தாண்டியும் படத்தில் சில பிளஸ்கள் இருக்கவே செய்கின்றன.

ஒரு கில்மா படத்துக்கான டைட்டிலை வைத்த கையோடு, ஷகிலாவை ஓரம் கட்டி கால்ஷீட்டை வாங்கி பெட்ஷீட்டை விரித்து படம்பிடித்திருந்தால் ஒருவாறாக மனசை தேத்திக்கொண்டு வீடு திரும்பியிருக்கலாமோ?.

ஜானியின் காஸ்டிங் என்னவோ பல முன்னணி ஹீரோக்கள் செய்த (தெ.திருமகள் -விக்ரம், குணா –கமல் மற்றும் நம்ம செல்வராகவனின் –அனைத்து ஹீரோக்களும்) குணாதிசயங்களையே நினைவு ‘படுத்துகின்றன. வேறு ஏதேனும் புதிதாக யோசித்து இருக்கலாம்!

போஷாக்கான பாசம் கிடைக்காத நாலரை பால் அர்ஜூன்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் சமூக அக்கறை மட்டுமே படத்தின் மீது நாம் வைக்கும் கொஞ்ச அக்கறைக்கான காரணமாய் இருந்திடக்கூடும்.

9 comments:

  1. இறுதி வரிகள் அருமை பாஸ்

    ReplyDelete
    Replies
    1. appo mathadhellam mokkaiyaa???

      Delete
  2. ரேணிகுண்டா என்னும் சுமாருக்கும் சற்று கம்மியான படத்தை கொண்டாடியதற்கு கிடைத்த பரிசாக இதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்! - கணேஷ் வசந்த்

    ReplyDelete
    Replies
    1. நான் ரேனிகுண்டா பார்த்து இதயேத்தான் நினைத்தேன் நண்பரே..

      Delete
  3. பாஸ்! நான் வெறும் விமர்சனம் மட்டுமே படிக்கும் ஆள்!
    தியேட்டர்களுக்கு செல்லும் அளவு மனோதைரியம் இல்லாதவன்!
    உங்க விமர்சனத்தை படித்தே இந்த படம் என்ன படம்(?) என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
    கஷ்டப்பட்டு,காசை வீணாக்கி,உழைப்பை கொட்டி எடுக்கும் படங்களை, சில சமயம், காறித்துப்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கு!
    அய்யோ..பாவம்’னு பாராட்டி எழுதினா... பய புள்ளைக, நம்மளை கோமாளி ஆக்கிடுவாங்களே!

    ReplyDelete
  4. ச்சே,

    என்னா பதிவு, என்னா விமர்சனம்.

    சூப்பர்.

    இந்த விமர்சனத்திற்கு ஆஸ்கார் விருதினை பரிந்துரைக்கிறேன்.

    ஐயம் சாரி, மாத்தி சொல்லிட்டேன்.

    ஆஸ்கார் விருதிற்கு இந்த விமர்சனத்தினை பரிந்துரைக்கிறேன்.

    (On Second Thoughts,முதல்ல சொன்னதுலா கூட தப்பில்லைன்னு தோணுது)

    ReplyDelete
    Replies
    1. உங்க ஆர்வம் புரியுது.. இந்த விஷயத்துல நானும் கமலஹாசனும் ஒன்னு.. இது புரியாதவன் வாயில மண்ணு..

      Delete
  5. u DONT TALK ABOUT SOCIETY SPOILING- BECAUSE U HAVE ALSO DID THIS THE REASON -THIS TYPE OF CREATION IN SOCIETY

    ReplyDelete