Saturday, February 8, 2014

பத்மினிக்கு என்னதான் பிரச்சினை!?

பத்மினிக்கு என்னதான் பிரச்சினை!?

  
ஒரு ஊர்ல ஒரு பண்ணையார்.. அவர் பாட்டுக்கு தேமேயென்று வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு செல்கையில் நண்பர் பத்மினி கார் ஒன்றைக் கொடுத்து தான் திரும்ப வந்து வாங்கிக்கொள்ளும்வரை பார்த்துக்கொள்ள சொல்கிறார். பார்த்த மாத்திரத்திலே பத்மினியை காதலிக்கதுவங்குகிறார் பண்ணை!.

தன் அடுத்த கல்யாண நாளுக்குள் காரை ஓட்டிப் பழகிவிட நினைக்கிறார் பண்ணையார்.  தாய் வீட்டிற்கு வந்தாலே எதையாவது பிடுங்கிச்செல்லும் மகளிடம் இருந்தும், என்றேனும் ஒருநாள் திரும்ப வந்து காரை கேட்கப்போகும் நண்பனிடமிருந்தும் காரை காப்பாற்றினாரா என்பதே மீதி வரலாறு.

ஜெயப்பிரகாஷின் சாந்தமான பாவனைகள் முழுக்க பண்ணையார் பாத்திரத்துக்கு ஓரளவுக்குதான் பொருந்தியிருந்தாலும் தன் தேர்ந்த (வழக்கமான!?) நடிப்பால் கடைசிவரை நிறைவு செய்ய முயன்றிருக்கிறார். 

ஊரில் கார் ஓட்டத்தெரிந்த ஒரே ஆள் விஜய்சேதுபதி முருகேசன் பாத்திரத்துக்குள் கச்சிதமாகவே சம்மணமிட்டு அமர்ந்துக்கொள்கிறார். இவரின் காதல் கதையின் நீளத்தை கூட்டுவதற்கு மட்டுமே உதவியிருக்கிறது!. கதையின் ஃபோகஸ் ’பத்மினி’மீதுதான் என்பதால் இந்த காதல் பெரிதாக மனதில் பதிய மறுக்கின்றது. 

டைட்டிலுக்கு நியாயம் செய்ய நினைத்து பண்ணையாருக்கு தன் மனைவியுடன் ஒரு காதல் எபிஸோட் நிகழ்த்தியதில் ஒருவித செயற்கைத்தனம் க்ரீமி லேயராய் பரவத்துவங்குவதை உணரமுடிகிறது!. 

படத்தின் உயிர்நாடியான கதையில் உயிரோட்டம் இருந்தாலும், இப்படி ஒரு எமோஷனல் ட்ராமாவை சரியாக படைக்க பெரிய்ய்ய்ய அனுபவ முதிர்ச்சி தேவை என்பது புரிகிறது. இந்த குறைதான் பண்ணையார்-மனைவி இருவரின் ரொமான்ஸ் காட்சிகளின் செயற்கைத் தனத்தனத்தில் அயர்ச்சி ஏற்படுகிறது. 

பண்ணையார் காரை ஓட்ட கற்றுக்கொண்டாரென்றால் தன்னை கழட்டி விடுவாரென்று நம்பி கற்றுத்தருவதில் தகிடுதத்தம் செய்யும் இடங்களில் நல்ல ஸ்கோர் செய்கிறார் விஜய் சேதுபதி. பின்னர் பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும் உள்ள புரிதல் உணர்வு அலைவரிசையின் தாக்குதலில் நிலைக்குலைந்து உண்மையாவே கற்றுக்கொடுக்கத்துவங்கிடும் காட்சிகளில் அபாரமான உணர்வுகளை கொட்டி தன் கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். 

நாயகி அட்டக்கத்தி ஐஸ்வர்யாவிற்கு பெரிய அளவில் இடமில்லாது போனாலும் பீடையாக வரும் பாலசரவணவன் பல இடங்களில் கிச்சுகிச்சு மூட்டிவிடும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.  
டெக்னிக்கல் சமாச்சாரங்கள் பாஸ்மார்க் ஏரியாவில் இருப்பதால் அதனைக் குறித்த அலசல்களை விட்டுவிடுவோம்.

பல இடங்களில் திரைக்கதையில் தோய்வு இருந்தாலும்.. இதையே காரணம் காட்டி கமர்ஷியல் கப்ஸாக்களை நுழைக்காமல் விட்ட இயக்குனரின் நேர்மையை பாராட்டியேதான் ஆகவேண்டும்.
ஆனால் கல்லா கட்டுவதற்கான சினிமா யதார்த்தம் அதுவல்லவே. இன்னமும் ‘பூ’, ’தங்கமீன்கள்’ போன்ற உணர்ச்சி பூர்வமான சினிமாக்களை நெஞ்சில் அணைத்துக்கொள்ளும் கூட்டம் பேரளவில் உருவாகாத நிலையில் இது போன்ற சினிமா முயற்சிகள் ஓரங்கட்டப்படும் அபாயமிருக்கிறது.

படங்கள் மாறத்துவங்கிவிட்டன.. அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும் பொறுப்பு ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.

’ஆசுவாசமான மனநிலை’யுடன் படம் பார்க்கும் திறன் கைவரப்பெற்றிருந்தால் இந்த பத்மினியில் ஒரு ரசிக்கும்படியான சவாரி உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு நிச்சயம் உண்டு! 

நன்றி! 

கணேஷ் நாராயணஸ்வாமி

6 comments:

  1. இந்த படத்துக்கே இப்போ தான் பெருமை தோழர்.

    உங்க விமர்சனத்தால இந்த இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைச்சுடும் போல?

    ReplyDelete
  2. கிடைக்கட்டும் விஷ்வா

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக கிடைக்கும் சார்.

      Delete
  3. பொதுமக்களே,

    தியேட்டர் டைம்ஸ் கணேஷின் எழுத்துக்கள் உங்களுக்கு படித்தவுடனே பிடிக்காது.

    படிக்க படிக்கத்தான் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. போற வழியிலதான் கட்டைய் போடுறீங்கன்னு பாத்தா பாக்குற.இடத்திலெல்லாம் பவுன்ஸரை போடுறதே உமக்கு வேலையா போச்.. ம்ம்ம்ம்..

      Delete