
இந்தப்படம் ’தேசிய விருதினை வென்றது ஏன்?’ என்று கேட்டபொழுது ’அதுல கோழி ச்சண்டை இருக்குல்ல... அதான்..’ என்ற துணை இயக்குனரின் பதில் அவரின் அறியாமையா?... அல்லது அவரது அறிவு முதிர்ச்சியின் எல்லையா?.
சக படைப்பாளியின் திறனை கொண்டாடும் திறனை கொண்டாடும் பக்குவம் எல்லாருக்கும் என்று வருமோ.. அதுவரைக்கும் .. நேர் நின்று நிலைப்பிறழாத நியாயங்களை நெஞ்சுக்குள் திணித்திடும் திறன் வளர்ப்போம்.
நமது நியாயங்களும் ஏற்புகளும்:

நம்பிக்கை வைத்தால் குருநாதரை(ஐ.வெ.ச. ஜெயபாலன்) கடைசிவரை நம்பும் அவரின் வெள்ளந்தி மனசு... அதனால் விளையும் பூசல்களும் வன்முறைகளும்... அவரை நிர்கதியாக்கும்போது ... சேவலைப்போல சிலிர்த்தெழுந்து போராடுகிறார். சூழ்நிலையால் எதிராளியாக்கப்பட்ட நண்பருக்கு உயிர்ப்பிச்சை அளித்து, வன்முறை நிரந்தர தீர்வல்ல என தீர்மானித்து காதலியை கைப்பிடித்து வேறு புதிய வாழ்க்கையை தேடிச் செல்கிறார். நொடிகளில் சம்பாதித்த லட்சங்களை தன்னையே நம்பியிருந்த நண்பனிடம் விட்டுச்செல்வதன் மூலம் ’இதைப்போல எப்படியும் சம்பாதிக்க முடியும்’ என்ற கருப்புவின் மன தைரியம் வெளிப்படுகிறது.
’இணை’ துணைகளின் குமுறல்கள்:
- ’கோழிச்சண்டை நேச்சராவே இல்லைங்க... கருப்புவை வைத்து இயக்குனர் ஆட நினைத்த களத்தை கொத்திச்சமன் படுத்த மிட்டுமே கோழிச்சண்டை களம்.
- ’பொண்ணு ஸ்டேட்டஸ் எங்கே? தனுஷின் ஸ்டேட்டஸ் எங்கே?’ ... கருப்பு அவளை அடைய எந்த ஹீரொயிசமும் செய்யவில்லை. மாறாக அவனின் வெகுளித்தனத்தையும் தன் சொல்லுக்கடங்கும் தன்மையையும் அவள் ரசிக்கின்றாள். அதனாலேயே ஈர்ப்பும் வருவது இயல்புதானே?....
படத்தைப்பற்றி ஒரே வரியில் சொல்வதானால் "The Excellent Tamil Movie from a Perfect Movie Maker Mr. Vetrimaran".
No comments:
Post a Comment