Saturday, December 3, 2011

சசிகுமரின் ’போராளி‘ - திரைவிமர்சனம்

சமுத்திரகனியின் போராளி... மிகப்பெரிய தர்ம நியாய ங்களுக்காக போராடுவார் என்ற மிதமிஞ்சிய கற்பனைகளை கடாசி விட்டு முழுக்கவே அக்மார்க் சசிக்குமாரின் படத்தினை பார்க்கவே  தியேட்டருக்கு செல்லலாம்.


 நகரத்தில் வசிக்கும்  நண்பன் கஞ்சா கருப்புவின் வீட்டில் அவரது பாணியிலே தஞ்சம் புகும் சசிக்குமார் அல்லரி (குறும்பு) நரேஷ் சகாவினர் பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச்சேர்ந்து பங்க் ஓனர் அண்ணாச்சியின் அபிமானத்துடன் அங்கேயே சுயதொழில் தொடங்கி... என்று ஸ்முத்தாக  செல்லும் திரைக்கதை... இவர்களை ஒரு கும்பல் தேடிவரும்போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் தடதடக்க துவங்குகிறது. யார் இந்த கும்பல் என யோசிக்கவைத்து இடைவரும் இடைவேளைக்குப்பின், திரைக்கதை
ஸுப்பர் ஸானிக் வேகம்தான்...

‘பிரச்சினை எதுவானாலும் முடிவை நான்தான் எடுப்பேன்‘ என்னும்  ஹவுஸ் ஓனர், கொஞ்சி‘க்‘கொஞ்சி பேசும் குடிகாரர் பேச்சிலர்,  சாந்தியை கட்டிக்கொண்டு ஷாந்தியின்றி தவிக்கும் ‘படவா’ கோபி, மற்றும் படம் நெடுக கஞ்சா கருப்பு, பின்பாதியில் ‘பரோட்டா’ சூரி என அனைவரும் காமெடியில் தோரணம் கட்டி கதகளி ஆடியிருக்கிறார்கள்.


மறுத்தும் சிபாரிசுகளுடன் வரும் ஸ்வாதியின் காதலை ஏற்றுக்கொள்வதற்கு நாயகனுக்கு காரணங்கள் பெரிதாக எதுவும்  தேவைப்படவில்லைதான்... ஆனால் அதற்கான ஞாயங்கள் மிகச்சரியாகவே கையாளப்பட்டிருக்கின்றன. குறைசொல்ல வைக்காத பாத்திரபடைப்புகள். சமுக அக்கறையுடன் கூடிய யதார்த்தங்களை இறைத்துப்போடும் பளிச்சென்ற வசனங்கள்  என கச்சிதமான படைப்பு.

சுந்தர் C பாபுவின் இசையும் தன் கடமையாற்றியுள்ளது.


விலாநோகும்படியான  பெருங்குரலெடுத்த சிரிப்புக்களும்,  தியேட்டரின் கோரஸான கைத்தட்டல்களும்,  போராளியின் வெற்றிக்குறிக்கான அறிகுறிகள்.

2 comments:

  1. பார்ப்பதா இல்லையா என்று குழம்பிக் கொண்டிருந்தேன். உங்கள் விமர்சணத்தின் பின் பார்க்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். எல்லா பாவ புண்ணியங்களும் உங்களுக்கே...

    ReplyDelete
  2. நாங்க ‘மருதவேலு’வையே ப்ளாக்ல டிக்கட் வாங்கி பாக்குற ஆசாமிங்க... நாங்க அப்பவே அப்படி..

    ReplyDelete