Wednesday, May 1, 2013

சூது கவ்வும் - ஜாலியா கவ்வுங்க..

சூது கவ்வும் - செம கவ்வு..


நலன் குமாரசாமி, ‘ஒரு படம் பண்ணனும்’, ’நடந்தது என்னன்னா..’, ’துரும்பிலும் இருப்பர்’, என்று குறும்படங்களிலேயே தன்னை அடையாளம் காட்டியவர். 

கலைஞர் தொ.கா. வின் நாளைய இயக்குனர் சீஸன் ஒன்றில் முதலிடத்தில் ஜெயித்தவர், தன் நண்பர்கள் பாலாஜி (KSY), கார்த்திக் சுப்புராஜ் (PIZZA), பரணி (ந.கொ.ப.கா) ஆகியோருக்கு பின்னர் நிதானமாக களம் இறங்கியுள்ளார்.. 

(இன்னும் இவர்களின் குரு ‘காக்கா முட்டை’ –மணிகண்டன், இவர்களின் குறும்பட ஆஸ்தான எடிட்டரின் ’நேரம்’ படங்களுக்கும் நிச்சயமாய் காத்திருக்கலாம்)


கோடம்பாக்கத்தின் சினிமா கதவுகளில் பொறிக்கப்பட்டிருந்த குருகுல கலாச்சாரங்களை உடைத்தெறிந்தது மட்டுமல்லாமல் பல நாளைய இயக்குனர்களுக்கு சில உண்மைகளை வெளிச்சம்போட்டு மெய்பித்துக் காட்டியுள்ள இவர்கள் அனைவரும் நிச்சயம் தமிழ் சினிமா உலகின் இளம் பிரம்மாக்கள்தான்.

அட்டகத்தி, பிட்ஸா தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்களின் தயாரிப்பில் படம் முடியும் தருவாயிலேயே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தால் வாங்கப்பட்டு.. இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

நல்ல படைப்புகளுக்கான வியாபாரம் இன்று இங்கே ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிடுவது ஆரோக்கியமான விஷயம்தான் இல்லையா?.

சூது கவ்வும் படத்தின் பாத்திரங்கள்கூட நலனின் குறும்படங்களின் கேரக்டர்களின் எஸ்டாபிலிஷ்டு வெர்ஷன்கள் என்பதும் கொஞ்சம் உண்மைதான்.. 40ப்ளஸ்களில் இருக்கும் விஜய் சேதுபதி ஒரு நியாயமான இரக்க சிந்தனையுள்ள நிறையவே எதிக்ஸ் பார்க்கும் கடத்தல் பேர்வழி.. அப்புறம் வேலையை இழந்த நண்பர்கள் நால்வர் ஒரு நல்ல ’குடி’ மாலைவேளையில் ஐக்கியமாகி இவர்களும் கடத்தல் வேலைக்கு இறங்குகிறார்கள். நிதியமைச்சர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் அருமைபிரகாசத்தை கடத்தும் வேலையில் இறங்கி அதகளப்பட்டு ஒருவழியாக கரை சேர்வதுதான் கதை. 

மாமா டவுசர் கழண்டுச்சே.. கொஞ்சம் லூஸான பேண்ட் போட்டிருந்தால் சிரித்து நமது டவுசர் கழண்டுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஹீரோயின் கேரக்டர் உருவாக்கம்கூட நலனின் ஸ்பெஷல் ஏரியாதான்.  

அருமைபிரகாசம் திரும்பக் கிடைத்தாலும் அவனை கடத்தி தன் அரசியல் எதிர்காலத்தை குலைத்தவர்களை விடக்கூடாது என்று வாயைத்திறந்து பேசாத என்கவுட்டரர்.. இன்ஸ்பெக்டர் பிரம்மாவை (டப்பிங் செலவு மிச்சம்..) வரவழைக்க கதை சூடுபிடிக்கிறது. ஆனால் அவரை அறிமுகப்படுத்தும் காட்சி அரத பழைய ஸீன் டெக்னிக்குதான். ஆனாலும் செம ஃபிட்டான வில்லன்தான்.

நுண்ணிய காமெடி டயலாக்குகளும், அங்கங்கே நச்சென தெறிக்கும் வசனங்களும் படத்தின் ஸ்பெஷல் பலம். 



அங்கங்கே இருக்கும் சில லாஜிக் பொத்தல்களை சிரிப்பு தோரணங்கள் கவனிக்கவிடாமல் செய்துவிடுவதால் படம் முடியும் வரை  நம் குறுக்கு சிந்தனைகளுக்கு இடமே இல்லாமல் போகிறது.  

டெர்ரர் இன்ஸு எப்படி இவர்களை கொல்லாமல் விட்டார் என்று தெரிந்தவுடன், சேதுபதி வகையறாவிற்கு உதவி செய்யும் டாக்டர் கம் ப்ரொட்யூஸர்(??!!) தன் பின்முதுகினில் சொருகியிருக்கும் துப்பாக்கியினை சத்தமின்றி கீழே வைப்பது, வீட்டை விட்டு கிளம்பும்போது ஃபீலிங்ஸுடன் வீட்டை பார்த்து முகாரிக்கு போகும் சேதுபதியை ‘இதுக்கெல்லாம் டைம் இல்லை வாங்க தாஸ்!” என்று கட் பண்ணி இழுத்துச்செல்வது என படம் முழுக்க ஹியூமர் தூவல்கள்தான். 

எல்லாவற்றிற்கும் மேலாக ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ வுக்கு இந்தமாதிரியான விளக்கம்.. ஹாஹ்ஹா.., அய்யோ சாமி,  தியேட்டரே.. குறிப்பாக விஷயம் புரிந்த, மேற்படி வசனத்திற்கு விளக்கம் தெரிந்தவர்கள் சிரிப்புச்சத்தம்தான் நெடுநேரம் அடங்கவில்லை..

அருவருத்து முகம்  சுளிக்கும்படியான காட்சிகள் இல்லாததும் படத்தின் ப்ளஸ்களில் ஒன்று. 

ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் தன் டிரைவர் வேலையினை சிலாகித்துச் சொல்லும் கட்டில்லா லென்த்தி ஷாட்கள் போன்றவை ஒரு அறிமுக இயக்குனரின் தன்னம்பிக்கைக்கான ஷா(?)ட்சிகள்தான்.

இரண்டரை நிமிஷமே என்றாலும் கானா பாலாவின் காசு பணம் பாடல் செம வெஸ்டர்ன் கு்த்துதான்.. ஆண்ட்ரியாவின் குரலில் மாமா டவுசர் பாட்டும் நைஸுங்கோ.

இசை, இயக்கம், ஒளிப்பதிவு, கலை என எல்லாரும் புதுவரவுகள்தான்.. சிறு சிறு குறைகள் தென்பட்டாலும் அதை மெனக்கெட்டு தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.. 


இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.. அதனால.. டோரண்ட்ட தேடாமல் கிளம்புங்க தியேட்டருக்கு.


நிச்சயமாக சூதுகவ்வும் செம ஜாலியான படம்..

6 comments: