Tuesday, May 21, 2013

நேரம் - (காலம்) கடந்து ஒரு விமர்சனம்..



படத்தின் கான்செப்ட்டே நல்ல நேரம் கெட்ட நேரம் சம்பந்தமானதுதான். ஆனா படம் பாத்த நொடியில இருந்து இந்த பதிவ
போட நேரம் கிடைக்காம அலைஞ்சது என்ன வகையான நேரம்னுதான் தெரியல.

’உலக சினிமா வரலாற்றிலேயே புதுமை எதுவும் இல்லாத திரைப்படம்’  போஸ்டர்லயே போட்டு ரவுசு பண்ணின டைரக்டர் படத்துலயும் நிறைய அலும்பு பண்ணி வெச்சிருக்காரு.
 
போன சூது கவ்வும் படத்துலயே நேரம் படத்துக்கான எனது எதிர்பார்ப்பை சொல்லி இருந்தேன்.. இந்த டைரக்டர் அல்போன்ஸும்  நலன், பாலாஜி, கார்த்திக் படங்களுக்கு வெட்டி ஒட்டும் வேலைய பாத்தவர்தான்.. 

என் நம்பிக்கை வீண் போகலை.. 

தட்டத்து மறையத்து.. மலையாளம் ப்ளாக் பஸ்டர் மூவியின் நாயகன் நிவின் பாலி..  இந்த ட்யூயல் மேக்கிங்ல ரெண்டு வெர்ஷன்லயுமே ஹீரோவா நடிச்சிருக்காரு.. செம பர்ஃபாமென்ஸ்.. வினித் சீனிவாசன் ஸ்கூல் ப்ராடக்ட் ஆச்சே!?.

இன்ப அதிர்ச்சியா நஸ்ரியா.. இத்தனை நாள் இந்த பொண்ணு எங்க இருந்தாளோ??  கேரளா டிவி ஆங்கராமா.. MUNCH ஸ்டார் சிங்கராமா..   அவ்ளோ அழகு!. ’ஒரு நாள் ஒரு கனவு’  படத்துல ஒரு ரோல் பண்ணதா ஞாபகம். நடிப்புல இம்ப்ரூவ்மெண்ட் இருந்தா... ம்ம்.. அதெல்லாம் கூட வேணாம் பொழைக்கத்தெரிஞ்ச பொண்ணா இருந்தா எல்லா உட்லயும் ஒரு ரவுண்டு வரலாம்..  சினிமா உலகம் அப்படித்தான் இருக்கு.. 

சரி.. படத்துக்கு போவோம்..

அமெரிக்காவுல தேள் கொட்டுனதால இங்க இருக்குற ஒரு கம்பெனியில நெரி கட்டுது..ஹீரோவுக்கு வேலை போயிடுது.  தங்கச்சி கல்யாணத்துக்கு சிம்ஹா கிட்ட கடன் வாங்கி மூணு மாசத்துல செட்டில் பண்ண வாக்கு ’வட்டி’யுறுதி தர்றாரு..

கடைசீ நாளு.. 
 
இந்த நேரத்துலதான்  சின்ன வயசுலர்ந்து பழகி.. ’பெருசான’ பின்னாடி கன்ஃபார்மா ஃபிகர்தான்னு உறுதிபண்ணி ஹீரோ காதலிச்சு   வந்த தம்பி ராமையா மகளும் இவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி ஹீரோ வெற்றிய தேடி வர்றாங்க.  (ஏன் டைரக்டர் சார்.. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்னு சொல்வாங்களே.. இந்த பழமொழி பொய்யா சார்? ஹீரோ ‘இவ இவ்ளோ ஃபிகரா வருவான்னு எதிர்பாக்கல”ன்னு சொல்றாரே? ) 
  
அன்னைக்கு வட்டி ராஜாவுக்கு பணத்த செட்டில் பண்ணாரா?  வட்டி க்ரூப்பால  கடத்தப்பட்ட ஹீரோயின காப்பாத்துனாராங்கறதுதான் மீதிப்படம்.

படம் என்னவோ செமயா இருந்தாலும் இப்படி கதைக்கான முடிச்சுகளைப் போட முதல் பாதி வரை முழுசா  ’நேரம்’ எடுத்து நம்மை சோதிச்சு இருக்காரு. 

ஆனா ’கதைச்சொல்லி’களாக இருந்த  சினிமா இயக்குனர்களுக்கு நடுவே,  இதுபோல சம்பவங்களை சினிமாவாக சொல்ல வந்த இந்த தலைமுறை இயக்குனர்களுக்கு சபாஷ் சொல்லிதான் தீரணும். 

இரண்டாம் பாதில இந்த 'Lag' ஐ எல்லாம் சரிகட்டும்விதமா படத்த விறுவிறுப்பா கொண்டுபோனதுல படம் ஜாலியா முடிஞ்சுடுது.. 


காஸ்டிங்ல அக்கறை காட்டியிருக்கும் இயக்குனர், கொஞ்சமே கொஞ்சம் கேரக்டர்களுக்கு நடுவே கதைய நகர்த்தினாலும், ஒவ்வொரு நடிகர்கள்ட்டயும் சிறப்பா வேலை வாங்கி இருக்காரு. தம்பிராமையா, சார்லி, நாசர், சிம்ஹா எல்லாருமே சிறப்பா பண்ணியிருப்பது படத்தின் பெரிய ப்ளஸ்.

முதல் ப்ரிவியூவுலயே ரெட் ஜெயண்ட் மூவீஸ் படத்த வாங்குனது சினிமா வட்டார பரபரப்பு.. 

பாடல்கள் ஹிட்டு.. RR  ராஜேஷ் முருகேசன்.. நல்லாதான் பண்ணியிருக்காரு. அதுவும் அந்த முக்கா மொழம் ப்ரொமோ பாட்டு அதிரி புதிரிதான்.

கேமரா.ஆனந்த்.சி.சந்திரன்..ஒளிப்பதிவு நல்லாவே இருக்கு ஆனா,  கட் இல்லாம நல்ல லென்த்தி ஷாட்கள் எடுக்கறதுதான் ட்ரெண்டுன்னு கெளப்பிட்டாங்க போல.  இந்த மாதிரி ஷாட்கள் எல்லாம் குறும்படங்கள் பாக்குற உணர்வைதான் உண்டாக்குது. காட்சிக்கு அவசியம்னா மட்டும் செய்யுங்கப்பா. மற்றபடி வழக்கமான சினிமா பாணிதான் சரி.   

கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாம எஞ்சாய் பண்ணிட்டு வரலாம்.  

நன்றி..





2 comments:

  1. super review!ஹீரோயின் ரொம்ப அழகா இருக்காங்களே, இப்பத் தான் பார்க்கிறேன் :)ஆனா படம் சூது கவ்வும் அளவு இல்லைன்னு நினைக்கிறேன். கண்டிப்பா பார்க்கணும்.

    amas32

    ReplyDelete
  2. இருந்தாலும் இதுவும் நல்லாதான் இருக்க்கு.. இந்நேரத்துல பாத்திருப்பீங்கன்னு நெனக்கிறேன்..

    ReplyDelete