Thursday, October 3, 2013

ராஜா ராணி - கதை


ஒரு அறிமுக இயக்குனரிடமிருந்து எதிர்பாராத.. குடும்ப வாழ்வியல் குறித்த கதையம்ஸம் கொண்ட படைப்பு.

 
உருகி நேசித்த காதலன் ஜெய்யை கண்காணாத தேசத்தில் இறந்துபோனதை நினைத்தே வாழும் காதலி நயந்தாரா அப்பாவின் கட்டாயத்தினாலும்..  கண்முன்னரே காதலியை(நஸ்ரியா) விபத்தில் பறிகொடுத்த காதலன் ஆர்யா, நண்பரின் வற்புறுத்தலாலும் திருமணம் செய்துக்கொண்டால் திருமணவாழ்வு எப்படி இருக்கும்?

வெறுப்பில் ஒருவரை ஒருவர் பாராமுகமாக., மூன்றாம் ஜீவனாக நடத்திக் கொண்டிருக்கையில் திடீரென்று நயனுக்கு இருக்கும் வலிப்பு நோயை பார்த்து பதறுகிறார் ஆர்யா
அங்கு நயனின் மூலமாகவே அவரின் பழைய காதல் கதையை கேட்டு மனம் மாறி அவரை நன்கு அறிந்துக்கொள்ள முற்படுகிறார். ஆனால் நயன் அதனை முன்பு போலவே உதாசீனப்படுத்த இருவருக்குமான விரிசல் நீடிக்கிறது
அதற்குபின்னர் அவர்கள் உறவில் மாற்றம் உண்டாக காரணம் என்ன.. இருவரும் இணக்கம் ஆனார்களா என்ற கேள்விகளுடன்  நீள்கிறது கதை.
நயனின் அப்பாவாக சத்யராஜ். டார்லிங் டார்லிங் என மகளும் அப்பாவும்  ஒருவரை ஒருவர் விளித்துக்கொள்வதிலேயே மகள்மீதான அன்பை நமக்கு எளிதில் உணர்த்திவிடுகிறார் இயக்குனர்ந’ச்’ரியா.. நயன்தாரா இருவரும் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர்
காட்சிகளும் கதைக்களமும் பழகிய பாதையிலேயே போவதால் அங்கங்கே லேசான சலிப்பு வருதலுக்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது.
கதைக்காக காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதுபோல் தெரிவதும் படத்திற்கான குறைபாடுகளுள் ஒன்று.
ஜி.வி ப்ரகாஷ் இசையில் ’ஏய் பேபி’ பாடல் அட்டகாசம் ஊடாக கானா பாலாவின் வரிகள் ஸ்பெஷல் ஜிகர்தண்டா.

அதிகமாக விமர்சன சுழலுக்குள் சிக்காமல் ஒரு மாதிரியாக நழுவிக்கொண்டு சென்று பார்ப்பவர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொள்கிறார்கள் ராஜாவும் ராணியும். 

புது இயக்குனர்களின் நடுவே தனிமுத்திரை பதிக்காவிட்டாலும் இது குடும்ப வாழ்க்கையினை துவங்கும் அனைவருக்கும் ஒரு ’மாதிரி’ கதையினை வார்த்துக்கொடுத்த வகையில் அட்லீ அசத்தல் ’லீ’தான்.





No comments:

Post a Comment