Thursday, February 5, 2015

என்னை அறிந்தால்.. திரைப்பார்வை


கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம்.. வேட்டையாடு விளையாடு.. 

இருங்க தப்பா சொல்லிட்டேன்.. படம் பேரு காக்க காக்க.. ச்சே.. அதுவும் தப்பு என்னை அறிந்தால்'தான் சரி.. பட் ஏன் இவ்ளோ குழப்பம்..?! .


வேட்டையாடு விளையாடுல 'பார்த்த முதல் நாளில்' பாட்டை கட் பண்ணிட்டு கொஞ்சம் காக்க காக்க'வுல இருந்து சில எபிஸோட்ஸ தூக்கி சொருகுனாப்ல இருந்துச்சு. 

இதுல அப்க்ரேட் என்னன்னா.. 
தி ஒன் அண்ட் ஒன்லி அஜீத்.. தல வெளுத்து வாங்குறார். ஆக்‌ஷன்லயும், சால்ட் அண்டு பெப்பர்லயும்..
 
அப்பப்ப 48 FRAMES' ல WIDE SHOT'ல ஒவ்வொரு கெட்டப் மாத்தும்போதும் ஒரு Walk கொடுத்து அப்ளாஸ் அள்ளுறார். அவர் ரசிக சிகாமணிகள் விசிலடிக்க இதப்போல கணிசமான சந்தர்ப்பங்கள் உண்டு. 

ஆனா வில்லன் ஆட்கள பொரட்டி எடுத்து உக்கிரம் அடையும்போது வக்கிரமா கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசுறார்.. ம்யூட்லதான்னாலும் அதுக்கும் கைதட்டுற இளைய சமுதாயத்தை நெனச்ச்ச்சா...

சரி கதைக்கு வருவோம்..  ஆன் தி வே ஆக்‌ஷன்ல நாட்டிய 'பேரொளி' திரிஷாவ அவசர உதவியா டெலிவரிக்கு  ஹாஸ்பிடல்ல விடுறார். அப்புறம் அவங்க கைக்குழந்தையோட டிவொர்ஸ் ஆய்ட்டாங்கன்னதும் அவங்க மேல கல்யாண வயப்படுறார்.
  
ஒரு நன்னாள் காலைல கல்யாணம்னு இருக்கசொல்ல முந்தய நாள் ராத்திரில யாரொ வில்லன் ஒருத்தன்  திரிஷாவ போட்டு தள்ள.. தல தள்ளாடிப்போய்டுறார். 
அப்புறம் அந்த குழந்தைக்காகவே வாழ்ந்தாரா..? இல்ல திரிஷா இல்லன்னா அனுஷ்கான்னு ஐக்கியமானாரான்றது மீதி கதை!

அட்டகாசமான வில்லனா அருண்விஜய். வந்த வேலைய சொந்த வேலையா நெனச்சு களமாடியிருக்கார். 

அவருக்கு ஜோடியா பார்வதி நாயர். அவங்களும் நடமாடியிருக்காங்க.

அஜித் நிறைய உழைச்சிருக்கார். பர்ஃபாமன்ஸ் உச்சம். அதுலயும் வாய்ஸ் டப்பிங் செம்ம ஸ்பெஷல். மாடுலேஷன் பிட்ச் மாறாம இருக்க ரொம்பவே மெனக்கெட்டு இருப்பார் போல.

படத்தின் எல்லா ஃப்ரேமும் அஜித் மயம். திரிஷாவுக்கு இந்த க்ளாஸிக்கல் லுக்கும் அழகாத்தான் இருக்கு.

சினிமாட்டோக்ராஃபி.. டேன் மெக்கார்தர்.. ஆஸ்ட்ரேலியாக்காரர். கண்ணுல ஒத்திக்கிறா மாதிரியான லைட்டிங் ஸென்ஸ். பர்ஃபெக்ட் க்ரியேட்டர். சீன்ல பிரமாண்டம் காட்டாம வேலைல சீனுக்கு ஸீன் பிரமாண்டம் காட்டியிருக்கார்.

ஹாரீஸ் BGM ஸ்கோரிங்ல தேறிட்டார்னு சொல்லலாம். முந்தைய படங்களுக்கு இது தேவலாம்.

வழக்கமான அஜித் படம் போல கலக்‌ஷன் ரெக்கார்ட் பண்ணினாலும்.. ஒரு புதுசா நிறைவான கதையா 'என்னை அறிந்தால்' இல்லை. அதேபோல வசனங்களும் சில இடங்களில் கொழந்தபுள்ளத்தனமாதான் இருக்கு.

இதய மாற்று சிகிச்சைக்கு பல கோடிகள் செலவு பண்ண தயாரா இருக்கும் ஒரு பணாக்கார  வில்லன் ஏன் தேவையில்லாம இல்லீகலா வாங்க துடிக்கிறார்..!? 

திடீர்னு நாலஞ்சு வருஷம் வேலைய விட்டுட்டு போகும் ஹீரோ.. சட்டுனு வந்து பதவிய ஏத்துக்குறார். இதெல்லாம் சாத்தியமா..!? எப்டி..எப்டி.. எப்டி???

அப்பாவ கொன்ன கேங்க்ஸ்டர் ஒருத்தனை ஏன் ஹீரோ  பழிவாங்கல..!? அட்லீஸ்ட் தேடக்கூட முயற்சி செய்யல..!?

திடீர் திடீர்னு யார் யாரொட வாய்ஸ் ஓவர்ல கதை நகருது. இந்த குழப்பம் ஏன்?!

இப்படி பல ஏன்.. எப்படிகள்.. இருக்கத்தான் செய்யுது.

மொத்தத்துல இது டிபிகல் கவுதம் மேனனின் ஸெண்டிமெண்ட் கலந்த ஆக்‌ஷன் ட்ராமா.

அதிகாலை FDFS 4 மணிக்கே.. சென்னை விருகம்பாக்கம் தேவி கருமாரி தியேட்டர்ல கூட்டம் குவிஞ்சு கிடந்தது.  வாழ்க தியேட்டர்ஸ்..
 
அப்புறம் ஒரு சின்ன விஷயம். உதவி இயக்குனர் வேலை பாத்துட்டு திரைவிமர்சனம் எழுதறது பல அசௌகரியங்கள் கொடுத்ததால பதிவு போடாமலே இருந்தேன். சரி முதல் ஷோ பாத்ததால எழுதலாம்னு வந்தா.. இது இந்த இணைய பக்கத்தின் 50வது பதிவு..! சின்ன சந்தோஷம்! அவ்வளவே! 

எழுத்தும் & கருத்தும்..
 கணேஷ் நாராயணஸ்வாமி

2 comments:

  1. //அப்புறம் ஒரு சின்ன விஷயம். உதவி இயக்குனர் வேலை பாத்துட்டு திரைவிமர்சனம் எழுதறது பல அசௌகரியங்கள் கொடுத்ததால பதிவு போடாமலே இருந்தேன். சரி முதல் ஷோ பாத்ததால எழுதலாம்னு வந்தா.. இது இந்த இணைய பக்கத்தின் 50வது பதிவு..! சின்ன சந்தோஷம்! அவ்வளவே! //

    அண்ணே, ஏன் 51 வரல?

    ReplyDelete
    Replies
    1. பொழப்பில் பிஸி தோழர்.. சிம்பா முடிஞ்சு ’பீடா’ வுல ஜாய்ன் பண்ணியாச்..
      தி.நகர் ஆஃபீஸ் வேலைப்பளு வேற..

      Delete