Tuesday, February 5, 2013

விஸ்வரூபம் – அகில நாயகனின் அல்டிமேட் ஆக்‌ஷன்.


MUSIC: Shankar Ishan Loy கூட்டணி.. DIRECTION: Kamal Hasan          CINEMATOGRAPHY: SANU VARGHEESE                                                                                                  CAST: Kamal Hassan, Andrea Jeremiah,  Zarina Wahab, Nasser, Poojakumar, Jaideep Ahlawat, Shekar Kapoor, Rahul Bose.



பொதுவாய் ’தடை’ அது இது என சீண்டப்பட்ட படங்கள் ஒரு 'ஹைப்' ஐ உருவாக்கி பின்னர் சே ”இவ்ளோதானா!” என சலிப்படைய வைத்ததுதான் வரலாறு. ஆனால் இன்று விஸ்வரூபம் இதற்கு விதிவிலக்கு.

நமது சகல எதிர்பார்ப்புகளுக்கும் ஒருபடி மேலே நின்று தன் ரூபத்தை காட்டியிருக்கிறார் கமல். இந்த படம் எங்கே, எந்த காட்சிகளில் நம் இஸ்லாமிய சகோதரர்கள் மனதை புண்படுத்துகிறது என்பது தமிழகத்தில் வெட்டப்பட்ட காட்சிகளை கொண்டுதான் உணர முடியும்போல. 

ஹாலிவுட்டுக்கு நிகரான ஆக்‌ஷன் பேக்கேஜ்களை வஞ்சனையின்றி வழங்கியிருக்கிறார்.  ஆரம்ப காட்சியில் ’VIZ’ என அழைக்கப்பட்டு பின்னர் ஃப்ளாஷ்பேக்கில் ”விஸாம் அஹ்மத் காஷ்மீரி” என்ற பெயரினை தாங்கி, தலிபன்களை உளவு பார்க்கும் RAW உளவாளியாக அறியப்படுகிறார். தானும் குழம்பி நம்மையும் குழப்பக்கூடாது என தெளிவாக ஆரம்பத்திலேயே தனக்கு ’கஷ்மீரி’யும் தெரியாது, ”பஷ்தோ”வும் தெரியாது என ஒப்புக் கொடுத்துவிடுகிறார். விளைவு பல இடங்களில் சப்-டைட்டில்களே புரிதலுக்கான புண்ணியத்தை கட்டிக்கொள்ளுகின்றன.

“பாப்பாத்தியம்மா, சிக்கன்ல உப்பு இருக்கா பாத்து சொல்லு”, ”நாங்க எங்க கடவுள கடல்லதான் போடுவோம், சிலுவைல அறைய மாட்டோம்” போன்ற வசனங்கள் கமலஹாசனை அடுத்த கட்ட அலைக்கழிப்புகளுக்கு ஆளாக்க நேரிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதன் பின்னான தர்க்க வாதங்கள் ஆண்டவனுக்கே வெளிச்சம்! (எந்த ஆண்டவனுக்கு என்பது உங்களுக்கே வெளிச்சம்..) கமலை போல் நாத்திகர்கள் அம்மாவிடம் முறையிடலாம். (எந்த அம்மான்றது… சரி விட்டுடுறேன்)

கதை?? ..ம்ம் சுருங்கச் சொல்லலாம் தவறில்லை. விளங்கச்சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இந்திய ராணுவத்தின் உளவுபிரிவில் பணிபுரிகிறார் கமல்ஹாசன். தலிபான்களின் களத்திலேயே ஊடுருவி அவர்களது நடவடிக்கைகளை நேட்டோ படைகளுக்கு நேக்காக போட்டுக்கொடுப்பதுவே அவரது அஸைன்மெண்ட்.

ஒஸாமாவின் அடுத்தக் கட்ட தலைவர்களில் முக்கியமானவரான   ’ஒமர்’ன் நம்பிக்கைக்குறியவனாகி அவர்களின் இடம்பெயர்தலையும், முக்கிய சந்திப்புகளையும் முறியடிக்க முனைகிறார், ஆனால் அவர்களின் விபரீத விஷமத்தனம் நியூயார்க் நகரில் மையம் கொண்டுள்ளதை அறிந்து ஒமரை காப்பாற்றி அனுப்பிவிடுகிறார்.

அதன் பின்னர் நியூயார்க்கில் அவர்களது மொத்த திட்டத்தையும் முறியடிப்பதே பின்கதை.

எந்தவித லாஜிக் பொத்தல்களுக்கும் இடம் தரக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார் கமலஹாசன். ஆனாலும் சில ஓட்டைகள். மேம்போக்காக எதையும் கவனித்தால் பல சந்தேகங்கள் எழ வாய்ப்புண்டு. ஆனால் ஒவ்வொரு ஃப்ரேம்களும் கனகச்சிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிற்சில காட்சிகள் மறுபடியும் விளக்கப்’படு’வதை’ தவிர்த்திருக்கலாமோ!?.  அதே நேரத்தில் கமலிடம் கொடுக்கப்படும் துப்பாக்கியினை யார் அவரிடம் கொடுக்கச்சொன்னது என்று கொடுப்பவர்க்கே தெரியாது என்பது போன்ற வசனங்கள் நம்மை சுத்தலில் விடுகிறது.

ஒமரின் மகன்களின் எதிர்கால விருப்பங்கள் நொறுக்கப்படுவது, வெறுமனே கடந்து போகும் காட்சியல்ல.. நாளைய இளம் ஆஃப்கானிய தலைமுறையினரின் நசுக்கப்பட்ட ஆசைகளின் காட்சிப் பதிவு. இந்தபதிவுகள் பட்டவர்த்தனமான உண்மை எனும்பட்சத்தில்,அந்த பிஞ்சுகள் ’விரல் துப்பாக்கி’யால் சுட்டு விளையாடாமல் வேறு எதில் விளையாடும்??. ஒரு இளம் ஜிகாதி தன் குழந்தைத்தனமான ஆசைகளை சூசைட் பாமால் இறப்பதற்கு முன்னர் ஊஞ்சலில் ஆடியவண்ணம் ஒரு இனம்புரியாத வேதனையுடன் அனுபவிப்பது வன்சோகக்கவிதை. அதே ஊஞ்சலில் ஒமரின் அடுத்த மகன் அடுத்த நாள் அமர்ந்து ஆடுவது

வசனங்கள் அழகு. ”அவருக்கு அதெல்லாம் புரியும், இது தனிக்காழ்ப்பு இல்லையே” “எனக்குள்ளும் எமோஷனல் பேக்கேஜ் நிறய உண்டு” “யார் வர்றாங்க? அவர்தான் ஒஸ(ர)மா இருப்பாரே! அவர்தான்”, என ஆங்காங்கே கவன ஈர்ப்பு வசனங்களும் உண்டு.

வருங்கால சமுதாயத்திற்கு இந்த உலகத்தை இப்படியே கரடுமுரடாக விட்டுச்செல்லாமல் அமைதியை மட்டுமே பரிசாகத்தரவேண்டும் என்று பேராசைப்பட்டிருக்கிறார் கமல். ஆனால் அவரை வறுத்து எடுத்தது எதுவென அவருக்கே வெளிச்சம். அரசியலா, பகையுணர்ச்சியா?,தற்கால புகழ் விரும்பிகளின் கச்சேரியா? என கேட்டுக்கொண்டே போகலாம். பதில் இவற்றின் கலவையாகவும் இருந்திடக்கூடும்.

தலிபன்களைதான் தீவிரவாதி என்கிறார், அது உலகறிந்த விடயம். தலிபன்களைக்கூட அவர்கள் செய்வது தவறு என்று வாதிட வரவில்லை. முஸ்லிம்கள் எல்லாம் தலிபன்கள் என்று சொன்னால்தானே தவறு. ப்ச்.. இதைகுறித்து பலரும் விவாதித்து தீர்ந்துவிட்டதால் நாமும் இதனை விட்டுவிடுவோம்.   

சினிமாட்டொக்ராஃபி அற்புதம் என்று ஒற்றைச்சொல்லில் சொல்லிவிட்டு சென்றால் அது அபத்தம். ஸானு வர்கீஸ் கபடியில் எக்ஸ்பர்ட் போலே.. அருமையாக விளையாடி இருக்கிறார். நின்று மிதந்து தாவி பறக்கிறது காமிரா.

அப்புறம் என்ன சார்?? ஆண்ட்ரியா அவசியமில்லாத அவசியம், நாயகி பூஜாகுமாருக்கு ”கூஜாவிழி நாயகி” என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள். மூடித்திறக்கையில் எல்லாம் கவிழ்த்தும் கண்கள்.என்னமோ இருக்கிறது!!இந்தப் பெண்ணிலும்.. அமெரிக்காவாழ் இந்திய வம்சாவளி.. நல்ல இரக்கமான மனதுடையவர் போல தெரிகிறது..  மேடம் உங்க ’இடை’விடா சேவை எங்களுக்கு தேவை!!.. 

படத்தை இரண்டுமுறை பார்த்தேன், குமுளியிலும்,சிட்டூரிலும்..சிட்டூரில் டிக்கெட் எடுக்க வதைபட்ட கதை என்னோடு போகட்டும். ஃபோட்டோவில் காணும் கூட்டத்தை வைத்தே  முடிவு செய்துக்கொள்ளுங்கள்.நான் இனி தமிழக ரிலீஸுக்காக வெய்ட்டிங்!

குமுளியில்.. (இடுக்கி..)













பாலக்காடு சிட்டூரில்..


7 comments:

  1. Wow,

    it's Amazing.

    it's a Medical Miracle.

    ReplyDelete
  2. அழகான ஆழமான விமர்சனம்.
    தொடரட்டும் சேவை.

    ReplyDelete
  3. "எந்த கடவுள்" என்றால் எந்த மதம் சொல்லும் கடவுள் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. உலகில் ஒருவனுக்கு ஒரு அம்மாதான் இருக்க முடியும். ஆனால் ஒவ்வொரு மதமும் ஒரு கடவுளை சொல்லி அதுதான் உண்மையான கடவுள் என நம்புவதால்தான் எல்லா தீவிரவாதங்களுக்கும் காரணம். நீங்கள் சொல்லும் கடவுள் ஒருவரே என்பது எல்லா மதங்களும் சொல்வதுதான் அந்த ஒருவர் என்பதுதான் யார் என்பதில்தான் பிரச்சினையே.இதில என்ன உங்களுக்கு புரியவில்லை என்பதுதான் எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
  4. நாத்திகவாதம் சம்பந்தமானதை தவிற மற்றபடி நடுநிலையோடு எழுதப்பட்ட விமர்சனம். நன்றி. நடுநிலை என்பது ஒரு மோசடி என்பது நாத்திகம் சம்பந்தமான காட்சிகளை உங்களால் subjective ஆகத்தான் விமர்சிக்கமுடிந்துள்ளது என்பதில் மறுபடியும் நிரூபணம் ஆகிறது

    ReplyDelete
    Replies
    1. நான் நாத்திகவாதி என்ற தனிப்பட்ட அடையாளம் சுமக்கவிரும்பவில்லை.. இங்கு நான் எழுதியது படத்தில் வரும் வசனங்களை பகடி செய்வதாக அமைகிறது. அவ்வளவே.. நன்றி உங்கள் கருத்துக்கு.

      Delete