Saturday, April 26, 2014

வாயை மூடி பேசவும்! - திரைப்பார்வை

வாயை மூடி பேசவும்! - சிரிப்பதற்கு மட்டும் திறக்கலாம்!

தனக்கான உரிமைகளைக்கூட  வாய் திறந்து பேசி கேட்டு பெற தயங்கும் நாயகி, தர்மசங்கடமானதோ கலவரமோ.. எந்த சூழ்நிலையானாலும் தன் வாய் சாமர்த்தியத்தால் சமாளிக்கும் நாயகன். இருவரும் தங்கள் வாழ்வின் அதிமுக்கிய தருணத்தில் தங்கள் ’வாயால்’ சாதிக்க முடியாத விஷயத்தை சூழ்நிலையால் தங்களின் நேர் எதிர் குண ஸ்தானத்தில் நின்று பேசி ஜெயிப்பது தான் பாலாஜி மோகனின் வாய் மூடி பேசவும்!! 
இந்த ரொமாண்டிக் காமெடிக்  கதையின்  பக்க விளைவுகளாக கதையின் மாந்தர்கள் அனைவருக்கும் நல்ல / கெட்ட விளைவுகள் நடப்பதே கதைக்களத்துக்கான சூழல்.
பனிமலை என்ற மலைப்பிரதேசத்தில் திடீரென பரவும் ‘ஊமை(!?)க்காய்ச்சல்!’ செய்தி ரேடியோ ஜாக்கியாக ஆசைப்படும் அர்விந்திற்கு (தல்ஹெர் சல்மான்’) இடியாய் தொண்டையில் இறங்குகிறது., இதை சரி செய்ய ஹாஸ்பிட்டலுக்கு செல்ல அங்கு ஏற்கனவே ஒரு ’பொருந்தா’ உறவுடன் திருமணம் செய்யும் நிலையில் உள்ள நஸ்ரியாவை சந்திக்கிறார்.  பேசியே சாதிக்கும் ஹீரோ ’பேசா மடந்தை’யான நாயகிமேல் கொள்ளும் ஈர்ப்பு ஒரு அழகிய காதல் கவிதையாக பனிமலை பயணத்தை வழங்கிவிட்டு போகிறது. 
இதில் மலைப்பிரதேசத்திற்கு ’எட்டணா கொடு எங்கனா வுடு!!’ பட ஷூட்டிங்கிற்கு வரும் நடிகர் ‘நியூக்ளியர் ஸ்டார்’ பூமேஸ் (ஜான் விஜய்) அண்டு கோவிற்கும், அவரால் அவரது முந்தைய படங்களில் அவமானப்படுத்தப்பட்ட ‘குடிகாரர்கள்’ சார்பாக ஷூட்டிங்கை முறியடிக்க வரும் ‘மட்டை ரவி’ ரோபோ ஷங்கர் எபிஸோட் அட்டகாச காமெடி கிக்!. அதிலும் அந்த வாயை திறக்காத சமாதான ’பேச்சுவார்த்தையும்’, மோனொ ஆக்டிங்கில் நடக்கும் கனரக ஆயுத யுத்தமும் வெடிச்சிரிப்பை வரவழைக்கின்றன.
கதையில் இரண்டு நொடி கடந்த காரெக்டர்கள்கூட கதையின் உயிரோட்டத்தில் கிளைபிரிக்காமல் பயணித்திருப்பதுதான் படத்தின் பலம். நஸ்ரியாவின் ’மாற்றாந்தாய்’ மதுபாலா.., மகனின் காதல் திருமணத்தால் தனது சிரிப்பை மறந்துவிட்டப்பின் மறந்தும் சிரிக்காத ‘வினுச்சக்கரவர்த்தி’., பத்திரிக்கையாளர்களிடம் உளறிக்கொட்டும் சுகாதார அமைச்சர் ‘பாண்டியராஜன்’ என அனைவரும் கனகச்சிதமாக ‘அடக்கி வாசித்துள்ளனர்’! 
போதாக்குறைக்கு இயக்குனரே நியூஸ் ரீடர் அவதாரம் எடுத்து.. அரசியல்வாதிகள், சேனல்காரர்கள் என அனைவரையும் பல்முனைத் தாக்குதல் நடத்தி ’கத’கிழி. ஆடியுள்ளார்.     ஆங்காங்கே தமிழில் எழுத்துப்பிழைகளுடன் வரும் தொலைக்காட்சி ‘மார்க்கீஸ்’ களும் இவரின் குசும்பு கும்மாக்குகள்தான். ஒவ்வொரு செய்தியின் கடைசியில் அவர் காட்டும்  ’உடல்மொழி’ உச்சரிப்புகள்  ரவுசு பாஸ்!! 
ஸீன் ரோல்டனின் ’காதல் அலை ஒன்னு..’ பாடல் காதுக்குள் இன்னும் அலையடிக்கிறது. உருத்தாத பின்னணி இசையும், கண்ணை சலிப்படையச் செய்யாத மூணாறு மலைபிரதேசத்தின் ஒளிப்பதிவும் படத்தின் ’விண்ட்ஃபால்’ சமாச்சாரங்கள்.  
கலை இயக்கம் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியாக உள்ளது. எல்லா தரப்பினையும் சரியாக வேலைவாங்கிய வகையில் இயக்குனரிடம் முந்தைய படத்திலிருந்து பெருத்த முன்னேற்றம் இருப்பது நிச்சயம்.
எடிட்டிங்.. ஜில்லெட்டை வாழைப் பழத்தில் வைத்தது போல்  ஆர்பாட்டமில்லாத ஸ்மூத் மிஸ்டர்.அபினவ்.
தேவையின்றி பெருத்த எதிர்பார்ப்புகளை கிளப்பாமல்.. குழப்பமான ஃபீட்பேக்குகள் கிளம்புமானால் நிச்சயம் இது ஓடும் படங்களில் ஒன்றாகிவிடும்.
தமிழ் சினிமாவின் மாற்று முயற்சிகளில் நிச்சயம்  இது வரவேற்கக் கூடிய படம்தான்.  இதற்கான ரசிகர்கள் எல்லா தரப்புகளில் இருந்தும் மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நடக்கின்ற உண்மை.
வழக்கமான விஷயங்களாக இல்லாமல் ஒரு புதுமையான ஹில் பேக் கிரவுண்டில் விஷுவல் ட்ரீட்டாக படம் சிலாகிக்க வைக்கிறது . 
சில்லென்று ஒரு படம்!!

5 comments:

  1. இன்று மதியம் தான் படம் பார்த்தேன். அதனால் உங்கள் விமர்சனத்தை நன்கு ரசிக்க முடிந்தது :-)
    பாலாஜியின் வெகு சிறப்பான இரண்டாம் முயற்சி இந்தப் படம். சிம்பிளா ஹேண்டில் செய்து ஸ்கோர் பண்ணியிருக்கார். எனக்கும் படம் ரொம்பப் பிடிச்சுது.
    நல்ல விமர்சனம் :-)

    amas32

    ReplyDelete
  2. இடைவேளை க்குப்பிறகு படம் சைகை மொழியில்தான் நகர்கிறது அதற்கு. பார்வையாளர்களை டைரக்டர் இடைவேளைக்கு முன்பே தயார் படுத்தியிருக்க வேண்டாமா? பார்வையாளர்களை விடுங்கள் குறைந்தபட்சம் இசையமைப்பாளரையாவது தயார்படுத்தியிருக்க வேண்டாமா? படம் சைகை மொழியில் நகர்கையில் பின்னனி இசை காதை பிடுங்குகிறது.படத்தில் ஒரே ஆறுதல் ரோபோ சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான். இது அறிவுஜீவி களுக்கான படம்போல் தெரிகிறது.... நான் அறிவுஜீவி கிடையாது ஆதலால் எனக்கு இந்த படம் பிடிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தலைப்பே அந்த அலாரத்தை சுமந்திருக்கிறதே! படத்தின் நேர்த்தி.. நேர்மையான கதையம்ஸம்.. இன்னும் பல் ப்ளஸ்கள் உள்ளனவே..
      பருவாயில்லை.. உமது நேர்மையான கருத்து எனக்கு பிடித்திருந்தது!!

      Delete
    2. பட்.... உங்க விமர்சனம் எனக்கு பிடிச்சிருக்கு.

      Delete