Sunday, April 6, 2014

மான் கராத்தே! – ஒயிலாய் ஒரு மயிலாட்டம்!



  
காமெடிக்கான ஒரு பேஸ்மெண்ட் ஸ்டவ்வு, அதற்கு லாஜிக்  கலக்காத ஒரு கதை, அதை கிண்டுவதற்கு கொஞ்சம் ’பாத்திர’ங்கள், அப்புறம் தேவையான அளவு காமெடி மசாலா போட்டு கடைசிவரை கிண்டினால் ’மான்’ கூட்டாஞ்சோறு ரெடி. 

எங்கோ மலைப்பிரதேசத்தில் தேமெயென்று அலைந்துக்கொண்டிருக்கும் சித்தரை ’சத்வம்’ கம்ப்யூட்டரில் வேலைப்பார்க்கும் சதீஷ் உள்ளிட்ட அஞ்சு IT அடப்பாஸுகள் சீண்டுகிறார்கள். 

சித்தரும் இந்த வாலண்டியராய் வம்பிழுக்கும் பார்ட்டிகளிடம் தன் விட்டாலாச்சாரியார் திறமையை நிரூபிக்க எதிர்காலத்தில் வரும் தினத்தந்தி பேப்பரை கொடுத்து உதவுகிறார்(!?).இங்கே... இங்கமட்டும் ஏன் அப்படின்னு இங்கே கேள்வி கேக்காம விட்டுட்டீங்கன்னா நீங்க படத்தோட ஒட்டி ஒரு மாரத்தான் ரேஸ் ஓடலாம். 

அதன் பின்னர் பேப்பரில் போட்டிருக்கும் விஷயங்கள்  தவறாமல் நடந்துதானே வேண்டும்.  

இந்த நியூஸ் பேப்பரில் உள்ள விஷயங்கள் மூலம் ’பணம் சம்பாதிக்க வழியிருக்கா?’ என்று தேடுகின்றனர் இந்த கோஷ்டியினர்.  எதிர்காலத்தில் நடக்கும் பாக்ஸிங் போட்டியொன்றில் ராயபுரம் பீட்டர் 2 கோடி சம்பாதிக்க போகும் பணத்தில் பங்கு போட கிளம்புகின்றனர்.

’ஏழாம் அறிவு’ போதி தர்ம சித்தரின்  ஹேங்கோவர் குறையாத முருதாஸின் லைனை எடுத்துக்கொண்டு காமெடி கோதாவில் களமிறங்கியுள்ளார் புதிய இயக்குனர் திருகுமரன் அவர்கள். 

சிவகார்த்திகேயனுக்கு விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்டப்புக்கு நிகரான ஓப்பனிங் ஸாங்., ஆனால் அடுத்த ஸீனிலேயே தான் 10 ரூபாய்க்குக் கூட ஒர்த் இல்லாத வெறும் பயல் என்று ஸீன் வைத்தாலும் அது இவருக்கு நன்றாக பொருந்துகிறது.
இந்த இளம் ஹீரோக்கள் ‘மாஸ் ஹீரோ’ இமேஜ் ஒரு மாயை என்பதை அந்த சூப்பர்ஸ்டார் வந்து தன் திருவாய் மலரும்வரை ஓயமாட்டார்கள் போல!. 

 சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷிற்கு இதே மாதிரியான சிகையலங்காரம் சிங்காரிக்கப்பட்டு.. இப்போது அவர் அதை கலைத்துப் போடக்கூட முடியாமல் சிக்கு பிடித்த தலையுடன் அலைவது எல்லோருக்கும் தெரியும்.  வரலாறு முக்கியமாச்சே!.

சரி படம் எப்படி?, சித்தர், எதிர்கால நியூஸ்பேப்பர் என ஃபேண்ட்டஸி + காமெடி வகையறா படம் என்றானபின் தர்க்க வாதங்களை டிக்கெட் கவுண்ட்டரிலேயே வைத்துவிட்டு வந்துவிடுவதுதான் உத்தமம்.

சிவகார்த்திகேயன் முன்னெப்போதும்விட அழகாக இருக்கிறார் நன்றாக நடனமாடுகிறார்.. அப்புறம் முன்பைவிட டைமிங்கில் நல்ல முன்னேற்றம். ஆரம்பத்திலிருந்து காமெடி, ரொமான்ஸ் என்று ஜாலியாக ரெட்டைக்குதிரை சவாரி செய்யும் கதை, க்ளைமாக்ஸில் திடீரென காமெடி லகானை கழட்டிவைத்துவிட்டு சென்டிமென்ட் குதிரையை பூட்டிக்கொ’ல்’வதுதான் பொருந்தாமல் போகிறது.

மொக்கை ஜோக்குகளையும் அழகாக ப்ரெஸண்ட் செய்ய இயக்குனருக்கு தெரிந்திருக்கிறது.  படம் முழுக்கவே பல டயலாக்குகள் அப்ளாஸ் வாங்குகிறது.

கடந்த சில மாதங்களாக ’அஸோசியேட்’ இயக்குனராக சில டிஸ்கஷனில் உட்கார்ந்த பின்னர்தான் எனக்கு ஸ்க்ரிப்ட் ஐ டெவலப் செய்வதற்குள் தாவு தீர்வது புரிகிறது. 

இங்கே இணையத்தில் விமர்சனம் செய்யும்.. (நான் உட்பட) எல்லோரும் அட்லீஸ்ட் ஒரு ஷார்ட் ஃபில்மாவது எடுத்திருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றவேண்டும். 

இல்லாவிடினும் குறை சொல்வதில் உள்ள குற்ற உணர்ச்சியை உணர ஒரு சந்தர்ப்பத்தை இவர்கள் தானாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா??(2014 தேர்தல் ஜுரம்..).        

ஃபீல் மாறாம நூல் பிடிச்சு... கோல் மாறாம ஸீன் பண்ணுறது.. எம்புட்டு கஷ்டம் தெரியுமா பாஸ்?!.  சிலவிஷயங்கள அனுபவிச்சாதான் தெரியும்.   

முதல் வார முன்பதிவுகளிலேயே படத்திற்கான செலவினை ஈடு செய்த வகையில், சிவகார்த்திகேயனின் ஓப்பனிங் கலெக்‌ஷனுக்கான மார்க்கெட் மீண்டும் ஒருமுறை தனது ஸ்திரத்தன்மையை உறுதிசெய்கிறது.

சுகுமாரனின் கேமரா, மலைவெளிகளில் கும்கியை கட்டிச்சுமந்தவருக்கு, டவுன் வெளிகளில் குட்டி கும்கி, அவித்து தோலுரித்த உருளைக்கிழங்கு ஹன்ஷிகாவை அழகாக காட்டுவதில் பெரிய சிரமம் இருந்திருக்காது. அட்டகாசமான வேலைப்பாடு.


அப்புறம்.. இந்த சினிமா கேமரா மேன்களுக்கு ஒரு பொதுவான வேண்டுகோள், ரூல் ஆஃப் தேர்ட்ல ஃப்ரேம் வைக்கிறீங்க.. அழகாத்தான் இருக்கு.. ஆனா அந்தக்கடைசீல ஒக்காந்து இந்தக் கடைசீல தலைய திருப்பி பாக்கசொல்ல கஷ்டமாத்தான் இருக்குது. இருந்தாலும் உங்களுக்கு அழகியல் முக்கியம்தானோ!?




பின்னணி இசையில் அனிருத் மெருகேறித்தான் இருக்கிறார், அப்படியே போகிற போக்கில் இரண்டு ஜிகிடிகளுடன் வந்து ஒரு குத்தாட்டமும் போட்டிருக்கிறார்.. பாடல்கள் அதிரடி, நடன இயக்கம் சூப்பரப்பேய்!!

டபுள் மீனிங் வசனங்களையும், அந்த லிஃப்ட் ஸீனின் ‘ஃப்ளாவர்’ஐயும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.. அவ்வளவே..

முழு நீள கமர்ஷியல் ஸ்கேலில் முழம் போட வந்திருக்கும் மல்லிகைப்பூவிற்கு இதற்கு மேலும் வியாக்கியானம் தேவை இல்லை என நினைக்கிறேன்.

Ganesh Narayanaswamy.,
+91-98432-11228



6 comments:

  1. Viswa sonnathula thappe illa. Review is so neutral with no compromise.

    ReplyDelete
  2. ஒரு காமெடி ஃபிலிமை எப்படி லாஜிக் இல்லாம பாத்து ரசிக்கனுமோ..அதே மாதிரி விமர்சனமும் இருக்கு. கடைசி அரைமணி நேர துருத்தல் தான் மக்களுக்கு படத்தை பத்தி கடுப்பு கிளப்பிட்டு. வருத்தபடாத வாலிபர்சங்கம் மாதிரி காமெடி க்ளைமேக்ஸே ட்ரை பண்ணிருக்கலாம். அந்த அரை மணீ நேரத்த விட்டுட்டு பாத்தா, 2 மணி நேர காமெடி பட்டாசு தான் படம். நல்ல விமர்சனம்..வாழ்த்துக்கள் மாப்ளை.! இப்படிக்கு படம் பார்த்து சிரித்து மகிழ்ந்த கட்ட..!

    ReplyDelete
  3. நாளைய செய்திய இன்னிக்கே கொடுக்குறத 'உருவங்கள் மாறலாம்'படத்துலையே பாத்தாச்சி,தவிர S.V சேகரும் இதே கான்செப்ட்ல 1990ல தூர்தர்சனுக்கு ஒரு மினி சீரியல் பண்ணியிருக்கார்.காமெடி படத்துக்கு லாஜிக் பாக்கூடாதுதான் அதுக்காக குத்துச் சண்டையை இப்படியா கேவலப்படுத்துவது...?

    ReplyDelete